×

ஓட்டல் ஊழல் வழக்கில் லாலுவுக்கு இடைக்கால ஜாமீன்

புதுடெல்லி: ரயில்வே ஓட்டல் குத்தகை ஊழல் முறைகேடு வழக்கில் பீகார் முன்னாள் முதல்வர் லாலு பிரசாத் யாதவுக்கு இடைக்கால ஜாமீன் வழங்கி நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. பீகார் முன்னாள் முதல்வரும், ராஷ்டிரிய ஜனதா தள தலைவருமான லாலு பிரசாத் யாதவ், ரயில்வே அமைச்சராக இருந்தபோது ஐஆர்டிசி.க்கு சொந்தமான ஓட்டல்கள், தனியார் நிறுவனத்துக்கு குத்தகைக்கு விடப்பட்டது. இதில்,  ஊழல் நடந்துள்ளதாக புகார் எழுந்தது. லாலு பிரசாத் யாதவ், அவரது குடும்பத்தினர் மற்றும் அப்போதைய ரயில்வே அதிகாரிகள் உள்ளிட்டோர் மீது சிபிஐ வழக்கு பதிவு செய்தது. மேலும், லாலு, அவரது மனைவி ரப்ரிதேவி, மகன் தேஜஸ்வி உள்ளிட்டோர் மீது  அமலாக்கத் துறையும் சட்ட விரோத பண பரிவர்த்தனை சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்தது.  

 இந்த வழக்கில் ரப்ரிதேவி, தேஜஸ்வி உள்ளிட்டோர் டெல்லி நீதிமன்றத்தில் ஏற்கனவே ஜாமீன் பெற்றுள்ளனர். லாலு மனு மீதான விசாரணை தொடர்ந்து நடைபெற்று வந்தது. இந்நிலையில், சிறப்பு நீதிபதி அருண் பரத்வாஜ்   முன்னிலையில்   லாலுவின் மனு நேற்று விசாரணைக்கு வந்தது. அப்போது, கால்நடை தீவன ஊழல் வழக்கில் ராஞ்சி சிறையில் அடைக்கப்பட்டுள்ள லாலுவிடம், வீடியோ கான்பரன்ஸ் மூலம் விசாரணை நடத்தப்பட்டது.  பின்னர், இந்த வழக்கில் நீதிபதி அவருக்கு இடைக்கால ஜாமீன் வழங்கி உத்தரவிட்டார். மேலும், அவருக்கு ஜாமீன் வழங்குவது தொடர்பாக சிபிஐ.யும், அமலாக்கத் துறையும் உடனடியாக பதில் அளிக்கவும் உத்தரவிட்டார்.




பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Tags : Laloo , corruption, scandal case, Interim, Lalu
× RELATED மேரா பார்ட்டி என்சிபி ஹை மேரா நேத்தா பவார்ஜி ஹை: அஜித் பவார் ‘லொள்ளு ஹை’