×

குளிர்கால வனவிலங்கு கணக்கெடுப்பு : உடுமலை, அமராவதி வனச்சரகத்தில் துவக்கம்

உடுமலை: ஆனைமலை புலிகள் காப்பகத்தில் யானைகள், மான்கள், சிறுத்தைகள், செந்நாய்கள், காட்டெருமைகள் உள்ளிட்ட வன விலங்குகள் உள்ளன. ஆண்டுதோறும் கோடை மற்றும் குளிர் காலங்களில் வன விலங்கு கணக்கெடுப்பு பணி நடக்கிறது. இந்த ஆண்டுக்கான குளிர்கால வனவிலங்கு கணக்கெடுப்பு பணி நேற்று துவங்கியது.  ஆனைமலை புலிகள் காப்பகத்துக்கு உட்பட்ட உடுமலை வனச்சரகத்தில் 18 சுற்றுகளும், அமராவதி வனச்சரகத்தில் 9 சுற்றுகளும் உள்ளன. இதற்கான  நேர்கோட்டுப்பாதை உருவாக்கப்பட்டு, ஒரு சுற்றுக்கு ஒரு குழு வீதம் கணக்கெடுப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.

ஒரு குழுவில் வனவர், வேட்டை தடுப்பு  காவலர், தன்னார்வலர் உள்ளிட்ட 4 பேர் உள்ளனர். இவர்களுக்கு ஏற்கனவே பயிற்சி அளிக்கப்பட்டது. இதுபற்றி வனத்துறையினர் கூறியதாவது:முதல் மூன்று  நாட்கள் ஒவ்வொரு சுற்றிலும் தினசரி 4 முதல் 6 கிமீ தூரம் நடந்து சென்று மாமிச உண்ணிகளின் கால் தடங்கள், எச்சம், பிரண்டல், மரத்தில் ஏற்படும்  கீறல்கள், சிறுநீர் போன்ற அடையாளங்களை வைத்து கணக்கெடுக்கப்படும். அடுத்த 3 நாட்கள், 2 கிமீ தூரமுள்ள நேர்கோட்டு போதையில் சென்று, குளம்பினங்களை நேரில் கண்டு பதிவு செய்யப்படும். 7வது நாள் கழுகு இனங்கள் கண்டறியப்படும்.இவ்வாறு அவர்கள் தெரிவித்தனர்.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Tags : Udumalai ,Amaravathi Forest Launch , Wildlife, Survey, Udumalai, Amaravathi
× RELATED உடுமலை நகர திமுக சார்பில் நீர்மோர் பந்தல் திறப்பு