×

பிக் பாஷ் டி20 தொடர் தொடக்க ஆட்டத்தில் ஸ்டிரைக்கர்ஸ் வெற்றி

பிரிஸ்பேன்: பிக் பாஷ் டி20 தொடரின் தொடக்க லீக் ஆட்டத்தில், அடிலெய்டு ஸ்டிரைக்கர்ஸ் அணி 5 விக்கெட் வித்தியாசத்தில் பிரிஸ்பேன் ஹீட் அணியை வீழ்த்தியது.பிரிஸ்பேன் மைதானத்தில் நேற்று நடந்த இப்போட்டியில், டாசில் வென்ற அடிலெய்டு அணி முதலில் பந்துவீசியது. பிரிஸ்பேன் ஹீட்ஸ் 19.4 ஓவரில் 146 ரன் குவித்து ஆல் அவுட்டானது. கேப்டன் கிறிஸ் லின் அதிகபட்சமாக 33  ரன் (20 பந்து, 4 பவுண்டரி, 2 சிக்சர்) விளாசினார். பிரையன்ட் 22, ஜோ பர்ன்ஸ் 20, முஜீப் உர் ரகுமான் 27 ரன் எடுக்க, ஜிம்மி பியர்சன் ஆட்டமிழக்காமல் 24 ரன் (13 பந்து, 2 பவுண்டரி, 1 சிக்சர்) அடித்தார்.

அடிலெய்டு பந்துவீச்சில் ரஷித் கான் 4 ஓவரில் 19 ரன் விட்டுக்கொடுத்து 3 விக்கெட் கைப்பற்றினார். ஸ்டான்லேக், ஷார்ட் தலா 2, நெசர், சிடில், லாப்ளின் தலா 1 விக்கெட் வீழ்த்தினர். அடுத்து களமிறங்கிய அடிலெய்டு 19.1  ஓவரில் 5 விக்கெட் இழப்புக்கு 147 ரன் எடுத்து வென்றது. தொடக்க வீரர் அலெக்ஸ் கேரி அபாரமாக விளையாடி 70 ரன் (46 பந்து, 5 பவுண்டரி, 4 சிக்சர்) விளாசினார். வெதரால்டு 17, ஷார்ட் 13, லீமேன் 16 ரன் எடுத்தனர். வெல்ஸ்  24 ரன், நெசர் 1 ரன்னுடன் ஆட்டமிழக்காமல் இருந்தனர். ரஷித் கான் ஆட்ட நாயகன் விருது பெற்றார். ஸ்டிரைக்கர்ஸ் 2 புள்ளிகளை தட்டிச் சென்றது.



பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Tags : Strikers , Big Bash, T20, Strikers,game
× RELATED ஸ்டாய்னிஸ் அதிரடியில் மெல்போர்ன் ஸ்டார்ஸ் வெற்றி