×

வணிகர்களின் கோரிக்கையை நிறைவேற்ற தவறினால் மத்திய அரசுக்கு எதிராக 3 நாட்கள் கடையடைப்பு போராட்டம்: விக்கிரமராஜா

புதுடெல்லி: சில்லறை வணிகத்தில் நேரடி அந்நிய முதலீடுக்கு எதிர்ப்பு, அனைத்து பொருட்களுக்கும் ஜி.எஸ்.டி வரியை 12 சதவீதமாக குறைக்க வேண்டும். 60 வயதுடைய வணிகர்களுக்கு ஓய்வூதியம் வழங்க வேண்டும் என்பன உள்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி டெல்லியில் இன்று அகில இந்திய வணிகர்கள் கூட்டமைப்பு சார்பில் கரோல்பார்க் பகுதியில் போராட்டம் நடத்தப்பட்டது.  இதில் அனைத்து மாநிலங்களை சேர்ந்த வணிகர்கள் கூட்டமைப்பினரும் கலந்து கொண்டனர். இந்த நிலையில் தமிழகத்தின் சார்பாக வணிகர்கள் சங்க தலைவர் விக்கிரமராஜா கலந்து கொண்டார்.இதுகுறித்து அவர் கூறுகையில், ஆர்ப்பாட்டத்தில் வணிகர்களின் கோரிக்கையை உடனடியாக மத்திய அரசு நிறைவேற்ற வேண்டும் என்று வலியுறுத்தப்பட்டு கோஷம் எழுப்பப்பட்டது.

இதில் பிரதமர் நரேந்திர மோடி 99 சதவீத பொருட்களுக்கு ஜி.எஸ்.டி.வரியை 18 சதவீதமாக குறைக்கப்படும் என அறிவித்து உள்ளார். இது வரவேற்கத்தக்கது. ஆனால் இதை மேலும் 12 சதவீதமாக குறைக்க வேண்டும். வணிகர்களுக்கு மத்திய அரசு அறிவித்துள்ள அனைத்து திட்டங்களையும் உடனடியாக நிறைவேற்ற வேண்டும். அதேப்போல் அரசு ஊழியர்களுக்கு இணையான ஓய்வூதியம் வியாபரிகளுக்கும் வழங்கப்பட வேண்டும். இதைத்தவிர காலாவதியாந சுங்க கட்டணங்களை திரும்பப்பெற வேண்டும். சாலை சீரமைப்பு வசதிகளை அரசு மேற்கொள்ள வேண்டும். இதில் மேற்கண்ட கோரிக்கைகள் அaனைத்தையும் நிறைவேற்றவில்லை என்றால் நாடாளுமன்ற தேர்தலுக்கு முன்பு அனைத்து மாநில  கூட்டமைப்பும் ஒன்றிணைந்து மத்திய அரசை கண்டித்து 3 நாட்கள் தொடர் கடையடைப்பு போராட்டம் நடத்துவோம் என அவர் கூறினார்.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Tags : Central Government ,traders , Central Government, Strike Struggle, Wickramarajah
× RELATED தமிழ்நாட்டிற்கு வழங்கப்படும்...