×

சென்னை ராணுவ அதிகாரிகள் பயிற்சி மையத்தில் ஆப்கன் வீராங்கனைகளுக்கு பயிற்சி: 2வது ஆண்டாக வழங்கப்படுகிறது

சென்னை: சென்னை கிண்டியில் உள்ள ராணுவ அதிகாரிகள் பயிற்சி மையத்தில் ஆப்கானிஸ்தான் நாட்டை சேர்ந்த 19 வீராங்கனைகளுக்கு 4 வார காலம் சிறப்பு பயிற்சி அளிக்கப்பட்டு வருகிறது.  இந்தியாவில் சென்னை கிண்டி மற்றும் பீகார் மாநிலத்தில் கயா ஆகிய இடங்களில் ராணுவ அதிகாரிகள் பயிற்சி மையம் செயல்பட்டு வருகிறது. இந்த பயிற்சி மையத்தில் ராணுவ அதிகாரிகளுக்கு 6 மாதம் பயற்சி அளிக்கப்பட்டு ராணுவத்தில் பல்வேறு பிரிவுகளில் பணி அமர்த்தப்படுவார்கள். இவர்களுக்கான பயிற்சி நிறைவு விழா மார்ச் மற்றும் செப்டம்பர் மாதங்களில் நடைபெறும். இந்த பயிற்சி நிறைவு விழாவில் வெளிநாட்டை சேர்ந்த அதிகாரிகள் பயிற்சி முடிந்து  ராணுவத்தில் இணைவார்கள்.  இதை தவிர்த்து பல்வேறு நாடுகளை சேர்ந்த அதிகாரிகளுக்கு குறுகிய கால பயிற்சிகளும் அளிக்கப்பட்டு வருகிறது.

அதன்படி, சென்னை ராணுவ அதிகாரிகள் பயிற்சி மையத்தில் ஆப்கானிஸ்தான் நாட்டை சேர்ந்த 19 வீராங்கனைகளுக்கு 4 வார காலம் சிறப்பு பயிற்சி அளிக்கப்பட்டு வருகிறது. இவர்களுக்கான பயிற்சி காலம் கடந்த நவம்பர் 26ம் தேதி ெதாடங்கியது. இந்த 19 வீராங்கனைகளும், ஏற்கனவே ஆப்கன் நாட்டில் உள்ள ராணுவத்தில் 2 மற்றும் 3 ஆண்டுகள் வரை பணியாற்றியவர்கள். இந்திய அரசு பல்வேறு நாடுகளுடன் செய்து ெகாண்ட ஒப்பந்தத்தின் அடிப்படையில் அவர்களுக்கு பயிற்சி அளிக்கப்பட்டு வருகிறது. இந்தியாவில் சென்னையில் மட்டும்தான் பெண் அதிகாரிகளுக்கு பயிற்சி அளிக்கப்படுகிறது. அதன் அடிப்படையில் அவர்கள் இங்கு பயிற்சி மேற்கொண்டு வருகின்றனர்.

இந்த 4 வார காலத்தில் அவர்களுக்கு உடல் தகுதி பயிற்சி, ஆயுதப்பயிற்சி, தலைமை பண்புபயிற்சி, மனிதவள மேம்பாட்டு பயிற்சி, தகவல் தொழில்நுட்ப பயிற்சி மற்றும் ஆங்கில புலமை பயிற்சி ஆகியவை வழங்கப்படுகிறது. கடந்த ஆண்டு இதேபோன்று 19 ஆப்கன் வீராங்கனைகளுக்கு ஒரு வாரம் மட்டும் தான் பயிற்சி அளிக்கப்பட்டது. இந்த ஆண்டு 4 வாரம் பயிற்சி அளிக்கப்பட்டுள்ளது. இந்த 4 வாரகாலம் பயிற்சியானது வரும் 26ம் தேதியுடன் முடிவடைகிறது. வீராங்கனைகளுக்கு பயிற்சி அளிக்கும் இந்திய ராணுவத்தை சேர்ந்த மேஜர் தேஜஸ்மித் கூறுகையில், “ஏற்கனவே இவர்களுக்கு ஆப்கன் நாட்டில் 1 ஆண்டு முதல் 2 ஆண்டுகள் வரை  பயிற்சி அளிக்கப்பட்டது.

இங்கு 4 வாரகாலம் பயிற்சி அளிக்கப்பட்டுள்ளது. இந்த பயிற்சியின் போது அவர்களுக்கு மொழிதான் முக்கிய பிரச்னையாக இருந்தது. இதை தவிர மற்ற பயிற்சிகள் அனைத்தையும் அவர்கள் சிறப்பாக மேற்கொண்டனர்” என்றார். ஆப்கன் ராணுவ அதிகாரி கேப்டன் சிராஜிதுல்லா சவி நிருபர்களிடம் கூறியதாவது:  இந்திய ராணுவம் உலகத்தில் மிகவும் பழமை மற்றும் நவீன தொழில்நுட்பங்களை கொண்ட ராணுவம். இந்த பயிற்சியின் மூலம் எங்களது வீராங்கனைகள் இந்திய ராணுவத்தில் பல்வேறு பயிற்சிகளை கற்றுக் கொண்டுள்ளனர். கடந்த ஆண்டு மிகவும் மூத்த அதிகாரிகள் வந்தார்கள். இந்த ஆண்டு மிகவும் இளம்பெண் அதிகாரிகள் வந்துள்ளனர்.

அவர்களுக்கு இங்கு பல்வேறு விதமான பயிற்சி அளிக்கப்பட்டது. ஆப்கன் ராணுவம் 2002ம் தொடங்கிய போது பெண்கள் குறைந்த அளவில்தான் சேர்ந்தனர். ஆனால் தற்போது ஆர்வம் அதிகரித்து அதிக அளவில் பெண்கள் ராணுவத்தில் சேர்ந்து வருகின்றனர்.  இவ்வாறு அவர் கூறினார்.



பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Tags : wrestlers ,Afghan ,Chennai Training Center Training Center , Training of Chennai officers, Afghan warrants
× RELATED தீவிரவாத தாக்குதலுக்கு மத்தியில்...