×

பிரிட்டனில் இருந்து வெளியேற்றப்படும் உத்தரவை எதிர்த்து மேல்முறையீடு செய்தார் விஜய் மல்லையா

லண்டன்: பிரிட்டனில் இருந்து வெளியேற்றப்படும் உத்தரவை எதிர்த்து விஜய் மல்லையா மேல்முறையீடு செய்துள்ளார். பிரபல தொழில் அதிபர் விஜய் மல்லையா இந்திய பொதுத்துறை வங்கிகளில் ரூ.9 ஆயிரம் கோடி வரை கடன் பெற்றுவிட்டு அதனை திருப்பிச் செலுத்தவில்லை. இது தொடர்பாக அமலாக்கத்துறை தீவிர விசாரணை நடத்தி வந்த நிலையில், விஜய் மல்லையா கடந்த 2016ம் ஆண்டு மார்ச் மாதம் இங்கிலாந்து நாட்டிற்கு தப்பி சென்றார். விசாரணைக்காக நேரில் ஆஜராகும்படி அமலாக்கத்துறை பல முறை சம்மன் அனுப்பியும் விஜய் மல்லையா நாடு திரும்பவில்லை. இதையடுத்து மல்லையா மீது அமலாக்கத்துறை வழக்குப்பதிவு செய்து அவருடைய சொத்துகளை முடக்கியது. மேலும் அவரை தேடப்படும் குற்றவாளியாகவும் அறிவித்தனர்.

விஜய் மல்லையாவை நாடு கடத்துவதற்கான நடவடிக்கைகளை மத்திய அரசு மேற்கொண்டது. இதனிடையே லண்டன் போலீசாரால் விஜய் மல்லையா கடந்த ஆண்டு கைது செய்யப்பட்டு உடனடியாக ஜாமீனில் வெளியே வந்தார். இதனை தொடர்ந்து விஜய் மல்லையாவை இந்தியாவுக்கு நாடு கடத்துவது தொடர்பான வழக்கில், வங்கி மோசடி வழக்கு விசாரணைக்காக விஜய் மல்லையாவை இந்தியாவுக்கு நாடு கடத்தலாம் என்று லண்டன்  கீழமை நீதிமன்றம் கடந்த வாரம் உத்தரவிட்டது. இந்த உத்தரவை எதிர்த்து விஜய்மல்லையா லண்டன் உயர்நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்துள்ளார்.


பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Tags : Vijay Mallya ,Britain , Britain, appeal, Vijay Mallya
× RELATED உலகம் முழுவதும் கடைப்பிடிக்கப்பட்ட...