×

கடன் கொடுத்தவர்கள் நெருக்கடியால் 2 குழந்தைகளுடன் தாய் தற்கொலை முயற்சி

சென்னை: பழவந்தாங்கல் பக்தவத்சலம் நகர் காமராஜர் தெருவை சேர்ந்தவர் ரமேஷ். இவரது மனைவி ரமீதா (30). தம்பதிக்கு பிரதீப்ராஜ் (8) என்ற மகனும், இளநிலவு (7) என்ற மகளும் உள்ளனர். கணவருக்கு தெரியாமல் ரமீதா சிலரிடம் ₹20 ஆயிரம் கடன் வாங்கியுள்ளார். இதை திருப்பி தராததால், கடன் கொடுத்தவர்கள் தகராறில் ஈடுபட்டுள்ளனர்.  இதுபற்றி அறிந்த ரமேஷ் மனைவியிடம் சண்டை போட்டுள்ளார். இதில் மனமுடைந்த ரமீதா, துணி சலவைக்கு பயன்படுத்தும் ரசாயனத்தை தனது 2 குழந்தைகளுக்கும் கொடுத்துவிட்டு, தானும் குடித்து மயங்கினார். அவரை மீட்டு மீட்டு குரோம்பேட்டை அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். 2 குழந்தைகளையும் சென்ைன எழும்பூர் அரசு குழந்தைகள் நல மருத்துவமனையில் சேர்த்தனர். அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

* பெரம்பூர் அடுத்த திரு.வி.க நகர்  காமராஜர்  நகர் 1வது தெருவை சேர்ந்த விக்னேஷ் (28) என்பவரை, அதே பகுதி  எம்எஸ்எல் தெருவை சேர்ந்தவர் அமானுல்லா (47), திரு.வி.க நகர் 4வது  தெருவை சேர்ந்த முபாரக் அலி  (43), ராஜ்குமார் (45) ஆகியோர் சரமாரி தாக்கியதில் படுகாயமடைந்து, சிகிச்சை பலனின்றி இறந்தார். போலீசார்  வழக்குப்பதிவு செய்து  அமானுல்லா, முபாரக் அலி, ராஜ்குமார் ஆகியோரை கைது  செய்தனர்.
* திருவல்லிக்கேணி டாக்டர் நடேசன் சாலை வெங்கிடசாமி 2வது தெருவை  சேர்ந்தவர் ரமேஷ்குமார் (18), ரோட்டரி நகர், கெனால்  தெருவை சேர்ந்த விக்னேஷ் (18). கல்லூரி மாணவர்களான இவர்கள் நேற்று முன்தினம் பெசன்ட்நகர்  சாலையில் பைக்கில் சென்றபேது, விபத்தில் சிக்கி படுகாயமடைந்தனர். இதல், சிகிச்சை பலனின்றி ரமேஷ்குமார் இறந்தார்.  விக்னேஷ் சிகிச்சை பெற்று வருகிறார்.
* அயப்பாக்கம் வீட்டு வசதி வாரிய குடியிருப்பை சேர்ந்த சரவணன்  (23) என்பவரை தாக்கிய ஆவடி, காமராஜர் நகர் விவேகானந்தா தெருவை  சேர்ந்த ராஜேஷ் (29), ஆவடி ஆனந்தம் நகர் ராமசாமி தெருவை சேர்ந்த  சந்திரசேகரன் (24) என்ற இரு நண்பர்களை போலீசார் கைது செய்தனர்.
* பட்டாபிராம் கருணாகரச்சேரி கிராமத்தில் உள்ள  இலவச தையல் பயிற்சி மையத்தில் 5  தையல் மெஷின்கள், ஒரு லேப்டாப் ஆகியவற்றை கொள்ளையடித்த  தண்டுரை, பள்ளத்தெருவை சேர்ந்த சுரேஷ் (22), அதே  பகுதியை பிள்ளையார் கோயில் தெருவைச் சேர்ந்த விஜய் (22), வள்ளலார் நகர்,  3வது தெருவை சேர்ந்த மணிகண்டன் (22), கருணாகரச்சேரி, பெருமாள் கோயில்  தெருவைச்சேர்ந்த கமல் (28) ஆகியோரை போலீசார் கைது செய்தனர்.
* பட்டாபிராம் முல்லை நகரை சேர்ந்த சந்தோஷ் (27) என்பவரை சரிமாரி தாக்கிய பட்டாபிராம் தண்டுரை  பள்ளத்தெருவை சேர்ந்த சுரேஷ் (22), அதே பகுதி பெருமாள் கோயில் தெருவைச்  சார்ந்த குமார் (22), பிள்ளையார் கோயில் தெருவை சேர்ந்த விஜய் (22),  பட்டாபிராம், வள்ளலார் நகர் 3வது தெருவை சேர்ந்த மணிகண்டன் (22)  ஆகியோரை போலீசார் கைது செய்தனர்.
* கோடம்பாக்கம் ரங்கராஜபுரம் பகுதியை  சேர்ந்த அசோக்குமார் (48) என்பவர், தண்டவாளத்தை கடக்க முயன்றபோது ரயில் மோதி இறந்தார்.

வாலிபருக்கு கத்திக்குத்து:
விழுப்புரம் மாவட்டத்தை சேர்ந்த அஸ்லாம் (32). நேற்று முன்தினம் இரவு புதுவண்ணாரப்பேட்டையில்  உறவினரின் குடும்ப நிகழ்ச்சிக்கு வந்தபோது, நண்பர்கள் சிலருடன், அதே பகுதியில் உள்ள பெட்டி கடை முன் சிகரெட்  பிடித்துள்ளார். அப்போது, அதே பகுதியை சேர்ந்த  ரவுடி சசிகுமார் (28) என்பவருக்கும், இருவருக்கும் தகராறு ஏற்பட்டது. ஆத்திரமடைந்த சசிகுமார், மறைத்து வைத்திருந்த கத்தியை எடுத்து அஸ்லாம்  வயிற்றில் சரமாரியாக குத்திவிட்டு தப்பிவிட்டார். அவருக்கு தீவிர சிகிச்சை  அளிக்கப்படுகிறது. போலீசார்  வழக்குப்பதிவு செய்து சசிகுமாரை கைது  செய்தனர்.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Tags : children , Debt, mother, suicide attempt
× RELATED உலகில் 8ல் ஒரு குழந்தை ஆன்லைன் மூலமாக...