×

காக்கிநாடா-ஏனாம் இடையே கரையை கடந்தது 'பெய்ட்டி'புயல்

விஜயவாடா: ஆந்திர மாநிலம் காக்கிநாடா-ஏனாம் இடையே பெய்ட்டி புயல் கரையை கடந்தது. புயல் கரையை கடந்தபோது மணிக்கு 80 கி.மீ. வேகத்தில் பலத்த காற்று வீசியது. தற்போது காக்கிநாடா, ஏனாம், மசூலிப்பட்டினம், விஜயவாடா உள்ளிட்ட பகுதிகளில் கனமழை பெய்து வருகிறது. அடுத்த 24 மணிநேரம் கனமழை தொடரும் என விஜயவாடா வானிலை மையம் அறிவித்துள்ளது.

புயல் கரையை கடந்த போது 80 கி.மீ. வேகத்தில் பலத்த காற்று வீசியதில் நரசிபட்டினம், காக்கிநாடா, ஏனாம் உள்ளிட்ட பகுதிகளில் ஏராளமான மரங்கள் வேரோடு சாய்ந்தன. இதேபோல் பல இடங்களில் மின்கம்பங்கள் சாய்ந்துள்ளதால் மின்னிணைப்பு முற்றிலுமாக துண்டிக்கப்பட்டுள்ளன. சாலைகளில் மரம் விழுந்ததால் போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளன.

புயல் கரையை கடப்பதால் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக இன்று ஆந்திராவின் கடற்கரையை ஒட்டியுள்ள 5 மாவட்டங்களில் உள்ள பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டது. இதேபோல் போல் மீனவர்களும் கடலுக்கு செல்லவேண்டாம் என அறிவுறுத்தப்பட்டது.

50 ரயில்கள் ரத்து
பெய்ட்டி புயல் காரணமாக ஆந்திர மாநிலம் காக்கிநாடா மார்க்கமாக செல்லும் 50 ரயில்கள் ரத்து செய்யப்பட்டுள்ளன. காற்று அதிகமாக வீசுவதால் பயணிகளின் நலன்கருதி ரயில்கள் ரத்து செய்யப்பட்டுள்ளதாக ரயில்வே தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. விஜயவாடா, குண்டூர், குண்டக்கல் ரயில்நிலையங்கள் அவசர சேவை மையங்களாக செயல்பட்டு வருகின்றன.

ஏனாம் நகரத்தில் வெள்ளம்
காக்கிநாடா அருகே உள்ள ஏனாம் நகரத்தில் புயல், மழையால் வெள்ளம் சூழ்ந்தது. பெய்ட்டி புயல் கரையை கடந்தபோது பெய்த கனமழை காரணமாக அப்பகுதியில் வெள்ளம் ஏற்பட்டது. ஏனாம் நகரம் புதுச்சேரி அரசின் நிர்வாகத்துக்கு உட்பட்டது. 


பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Tags : border ,Kakinada-Yanam 'Petti' Pillai , CyclonePhethai, Kakinada, Yanam, peytti storm, Vijayawada meteorological Center, CyclonePhethai
× RELATED தமிழக-கேரள எல்லையில் சீசன் நிறைவு;...