×

வைகுண்ட ஏகாதசிக்காக திருப்பூரில் ஒரு லட்சத்து 8 ஆயிரம் லட்டு தயாரிக்கும் பணி தீவிரம்

திருப்பூர்: வைகுண்ட ஏகாதசியை முன்விட்டு, பக்தர்களுக்கு வழங்குவதற்காக ஸ்ரீவாரி டிரஸ்ட்  சார்பில் ஒரு லட்சத்து 8 ஆயிரம் லட்டு தயாரிக்கும் பணி திருப்பூரில் நேற்று  துவங்கியது. திருப்பூர் ஸ்ரீ வீரராகவப் பெருமாள் திருக்கோயிலில் வைகுண்ட ஏகாதசி திருவிழா நாளை (18ம் தேதி) நடக்கிறது. நாளை அதிகாலை 5.30  மணியளவில் சொர்க்கவாசல் நடை திறக்கும் நிகழ்ச்சி நடைபெறுகிறது.

காலை முதல் மாலை வரை சொர்க்க வாசல் கடந்து வரும் அனைத்து பக்தர்களுக்கும் திருப்பூர் ஸ்ரீ வாரி டிரஸ்ட் பக்தர்கள் குழு இலவசமாக லட்டு வழங்க உள்ளனர். இதற்காக ஒரு லட்சத்து 8 ஆயிரம் லட்டு தயாரிக்கும் பணி திருப்பூர் பழைய பஸ் ஸ்டாண்ட் பின்புறமுள்ள காமாட்சியம்மன் திருமண மண்டபத்தில் நேற்று நடந்தது. இந்த லட்டு தயாரிக்கும் பணியில் திருப்பூர் மாவட்டம் மற்றும் வெளி மாவட்டங்களிலிருந்து சுமார் 75 சமையல் கலைஞர்கள் மற்றும் பிரசாத குழுவினர் என 100க்கும் மேற்பட்டோர் பங்கேற்றனர்.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Tags : Vaikuntha Ekadasi ,Tirupur , Vaikuntha Ekadasi, Tirupur, Lattu
× RELATED ஜவுளி உற்பத்தியாளர்களிடம் நியாயமான கூலி உயர்வை பெற்றுத்தர வேண்டும்