×

மணலி ஏரியில் ஆயில் கழிவுகள் அகற்றம்

திருவொற்றியூர்: திருவொற்றியூர் மணலி ஏரி கால்நடை பராமரிப்பு துறை கட்டுப்பாட்டில் உள்ளது. இந்த ஏரி முறையாக பராமரிக்கப்படாததால் ஆகாயத்தாமரை வளர்ந்து தூர்ந்துள்ளது. இதை தூர்வாரினால் மழைக்காலத்தில் சுற்றுவட்டாரத்தில் இருந்து வரக்கூடிய மழைநீர் தேங்கி நிலத்தடி நீர் பாதுகாக்கப்படும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்தனர்.

இந்நிலையில், வெளி ஊர்களில் இருந்து வரும் தனியார் லாரி உரிமையாளர்கள் சிலர், தார் ஆயில் மற்றும் கழிவுநீர் போன்றவைகளை இந்த ஏரியில் விடுவதால் ஏரி மாசுபட்டு வந்தது. இதை பருகும் ஆடு, மாடுகள் பாதிக்கப்படுகின்றன. இதுகுறித்த செய்தி தினகரன் நாளிதழில் கடந்த 12ம் தேதி வெளியானது. இதையடுத்து கால்நடைத்துறை அதிகாரி குப்புசாமி தலைமையில் அதிகாரிகள் மற்றும் ஊழியர்கள் கடந்த இரு தினங்களாக ஏரியில் படிந்துள்ள ஆயில் கழிவுகளை அப்புறப்படுத்தினர்.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Tags : Removal ,sandstone lake , Removal,oil waste,manali,lake
× RELATED தெற்காசியாவில் முதல்முறையாக ரோபோ...