×

பாமகவில் இருந்து நீக்கப்பட்டவர்களுடன் தொடர்பு வைத்து கொள்ளக் கூடாது தலைவர் ஜி.கே.மணி அறிக்கை

சென்னை: கட்சியிலிருந்து நீக்கப்பட்ட வி.ஜி.கே.மணியுடன் யாரும் தொடர்பு வைத்து கொள்ளக் கூடாது என்று பாமக தலைவர் ஜி.கே.மணி ெதரிவித்துள்ளார். இது குறித்து பாமக தலைவர் ஜி.கே.மணி வெளியிட்டுள்ள அறிக்கை: நாகப்பட்டினம் மாவட்டம் வழுவூரைச் சேர்ந்த வி.ஜி.கே.மணி தொடர்ந்து கட்சி விரோத செயல்பாடுகளில் ஈடுபட்டதற்காக கட்சியிலிருந்து நீக்கப்பட வேண்டும் என்ற கோரிக்கையில் கட்சியின் அடிப்படை உறுப்பினரிலிருந்து இரு முறை நீக்கப்பட்டவர். அவர் மீண்டும் சேர்க்கப்படவில்லை. கட்சியிலிருந்து நீக்கப்பட்ட நபரான விஜிகே மணி, அண்டை மாவட்டங்களான அரியலூர், தஞ்சாவூர், திருவாரூர், கடலூர் உள்ளிட்ட மாவட்டங்களுக்குச் சென்று கட்சியின் பெயரால் நிகழ்ச்சிகளை நடத்தி, அதில் கட்சிக்கு எதிராக பேசி வருகிறார்.

ராமதாஸ், அன்புமணி ராமதாஸ் ஆகியோருக்கு எதிராக அவதூறு பரப்புரைகளில் அந்த நபர் ஈடுபட்டு வருகிறார். கட்சியின் கட்டுப்பாட்டை மீறி, கட்சியின் நற்பெயருக்கு களங்கம் விளைவிக்கும் செயல்களிலும், கட்சி விரோத நடவடிக்கைகளிலும் ஈடுபட்டதற்காக கட்சியின் அடிப்படை உறுப்பினரிலிருந்து நீக்கப்பட்ட வி.ஜி.கே. மணியுடன் கட்சியினர் எவ்வித தொடர்பும் வைத்துக் கொள்ள வேண்டாம். இதை மீறி செயல்படுபவர்கள் மீது கட்சித் தலைமை நடவடிக்கை எடுக்கும் என்பதைத் தெரிவித்துக் கொள்கிறேன். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Tags : removal ,victims ,PMG , keep,touch,removal,victims,Chairman,GK Mani
× RELATED கென்யாவை புரட்டிப்போட்ட கனமழை!:...