×

குட்கா ஊழல் வழக்கு: சிபிஐ விசாரணைக்காக அமைச்சர் விஜயபாஸ்கர் இன்று 2-ம் நாளாக ஆஜர்

சென்னை: குட்கா ஊழல் வழக்கில் அமைச்சர் விஜயபாஸ்கர் இன்று மீண்டும் ஆஜராகியுள்ளார். முன்னதாக நேற்று சிபிஐ விசாரணைக்கு ஆஜராக வந்த அமைச்சர் விஜயபாஸ்கரிடம் அதிகாரிகள் சுமார் 9 மணி நேரத்திற்கும் மேலாக விசாரணை மேற்கொண்டனர். தடை செய்யப்பட்ட குட்கா பொருட்களை விற்பனை செய்ய காவல்துறை உயரதிகாரிகள், அரசு உயர் அதிகாரிகள், சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் உள்ளிட்டோர் லஞ்சம் பெற்றதாக கூறப்பட்ட விவகாரம் தொடர்பாக சிபிஐ விசாரணை கோரி திமுக சட்டப்பேரவை உறுப்பினர் ஜெ.அன்பழகன் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கு மீதான விசாரணை நடத்திய நீதிமன்றம், சிபிஐ விசாரணைக்கு அனுமதி அளித்து உத்தரவிட்டது.

இதனைத் தொடர்ந்து, குட்கா ஊழல் விவகாரத்தில் சென்னை உயர் நீதிமன்ற உத்தரவுப்படி சிபிஐ வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகிறது. இந்த வழக்கில் கைது செய்யப்பட்ட குட்கா ஆலை உரிமையாளர் மாதவராவ் உள்பட 6 பேர் சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். இந்நிலையில், குட்கா லஞ்ச வழக்கு தொடர்பாக அமைச்சர் விஜயபாஸ்கர் மற்றும் அவரது உதவியாளர் சரவணன் ஆகியோர் நேரில் ஆஜராகுமாறு சிபிஐ கடந்த வாரம் சம்மன் அனுப்பியது. அதன்படி, ஆஜரான விஜயபாஸ்கரின் உதவியாளர் சரவணன், சிபிஐ அலுவலகத்தில் ஆஜராகி இரண்டு நாட்களாக விளக்கமளித்தார்.

அதேபோல், சிபிஐ அனுப்பிய சம்மனின் பேரில் முன்னாள் அமைச்சர் பி.வி.ரமணாவும் விசாரணைக்கு நேற்று ஆஜரானார். அவர்களிடம் சுமார் 9 மணி நேரம் தீவிர விசாரணை நடத்திய அதிகாரிகள், கடந்த செப்டம்பரில் அவரது வீட்டில் நடந்த சோதனையின் போது கைப்பற்றப்பட்ட ஆவணங்கள் தொடர்பாக பல்வேறு கேள்விகளை கேட்டு வாக்குமூலம் பெற்றுள்ளனர். இந்நிலையில் இன்று மீண்டும் அவர்கள் விசாரணைக்காக ஆஜராகியுள்ளார்.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Tags : Wijepasakar ,Gudka ,investigation ,CBI , Gutka scam case, minister Vijayabaskar, CBI
× RELATED சென்னை புறநகர் பெட்டிக் கடைகளில் 13...