×

13 கி.மீ. வேகத்தில் நகரும் 'பெய்ட்டி'புயல்....... ஆந்திரா-புதுச்சேரிக்கு ஆரஞ்ச் அலெர்ட்

டெல்லி: பெய்ட்டி புயல் மணிக்கு 13 கிலோமீட்டர் வேகத்தில் நகர்ந்து வருவதால் ஆந்திரா-புதுச்சேரி மாநிலங்களுக்கு ஆரஞ்ச் அலெர்ட் விடப்பட்டுள்ளது. புயல் நாளை மதியம் மசூலிபட்டினம்-காக்கிநாடா இடையே கரையை கடக்க வாய்ப்புள்ளதாக இந்திய வானிலை மையம் தெரிவித்துள்ளது.

வங்கக்கடலில் உருவாகியிருந்த ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் நேற்று புயலாக மாறியது. இந்த புயலுக்கு பெய்ட்டி என பெயரிடப்பட்டுள்ளது. பெய்ட்டி புயல் இன்று அதிதீவிர புயலாக மாறக்கூடும் என வானிலை மையம் தெரிவித்துள்ளது. இதன்காரணமாக ஆந்திர கடலோர பகுதிகளில் இன்றும், நாளையும் கனமழை பெய்யக்கூடும். புயலால் கோதாவரி, விசாகப்பட்டினம், கிருஷ்ணா, குண்டூர் மாவட்டங்கள் பாதிக்கப்பட வாய்ப்புள்ளதாக வானிலை மையம் தெரிவித்துள்ளது.

புதுச்சேரி யூனியன் பிரதேசத்தை சேர்ந்த ஏனம் மாவட்டமும் புயலால் பாதிக்கப்பட வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது.  மேலும் வட தமிழகத்தின் கடலோரப் பகுதிகளில் பலத்த காற்றுடன் கூடிய கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக கூறப்பட்டுள்ளது. குறிப்பாக சென்னை, காஞ்சிபுரம் மற்றும் திருவள்ளூரில் மிதமான மற்றும் கனமழை பெய்யும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.  

புயல் தொடர்பான புகார்களைத் தெரிவிக்க 1077 என்ற கட்டணமில்லா எண்ணை தொடர்பு கொள்ளுமாறு மாவட்ட நிர்வாகம் அறிவுறுத்தியுள்ளது. இந்நிலையில் இன்று ஆந்திரா-புதுச்சேரி மாநிலங்களுக்கு ஆரஞ்ச் அலெர்ட் விடப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Tags : Baiti , beity cyclone, Indian Meteorological Center, Andhra Pradesh, Puducherry
× RELATED பெய்ட்டி புயல் தாண்டவத்தால்...