×

விவிஐபி ஹெலிகாப்டர் ஊழல் தரகர் கிறிஸ்டியன் மைக்கேலின் சிபிஐ காவல் நீட்டிப்பு

புதுடெல்லி: விவிஐபி ஹெலிகாப்டர் ஊழல் வழக்கில் சிக்கிய இங்கிலாந்து தரகர் கிறிஸ்டியன் மைக்கேலின் சிபிஐ காவலை மேலும் 4 நாட்களுக்கு டெல்லி நீதிமன்றம் நேற்று நீட்டித்தது. ஜனாதிபதி, பிரதமர் உள்ளிட்ட விவிஐபி.களின் பயணத்துக்காக ₹4,500 கோடிக்கு ஹெலிகாப்டர்கள் வாங்க அகஸ்டாவெஸ்ட்லேண்ட் நிறுவனத்திடம் ஒப்பந்தம் செய்யப்பட்டது. இந்த ஒப்பந்தத்தில் இங்கிலாந்தைச் சேர்ந்த கிறிஸ்டியன் மைக்கேல் உட்பட மூன்று வெளிநாட்டினர் இந்த ஒப்பந்தத்தில் தரகர்களாக செயல்பட்டனர். இதில், கிறிஸ்டியன் மைக்கேல் அகஸ்டாவெஸ்ட்லேண்ட் நிறுவனத்திடமிருந்து ரூ.225 கோடி கமிஷன் பெற்றது தெரியவந்தது. இதையடுத்து, இந்த ஒப்பந்தம் ரத்து செய்யப்பட்டது. மேலும், கிறிஸ்டியன் மைக்கேல் உட்பட பலர் மீது சிபிஐ.யும். அமலாக்கத் துறையும் வழக்கு பதிவு செய்து தேடி வந்தது.

இந்நிலையில், ஐக்கிய அரபு எமிரேட்டில் கைது செய்யப்பட்ட மைக்கேல், கடந்த 4ம் தேதி இந்தியாவுக்கு நாடு கடத்தி கொண்டு வரப்பட்டார். டெல்லி நீதிமன்றத்தில் இவர் ஆஜர்படுத்தப்பட்டபோது 5 நாள் சிபிஐ காவலில் அனுப்பப்பட்டார். இந்த காவல் நேற்று முடிந்ததால், டெல்லி சிறப்பு நீதிபதி அரவிந்த் குமார் முன்னிலையில் ஆஜர்படுத்தப்பட்டார். அப்போது, சிபிஐ கோரிக்கைப்படி அவரது காவல் மேலும் 4 நாள் நீட்டிக்கப்பட்டது.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Tags : Christine Michael ,VVIP ,CBI , Helicopter scam, broker Christine Michael, CPI police extension
× RELATED அதிமுக முன்னாள் அமைச்சர்கள் மீதான...