×

ஹெலிகாப்டர் ஒப்பந்த முறைகேடு: இடைத்தரகருக்கு சிபிஐ காவல் நீட்டிப்பு

டெல்லி: அகஸ்டா வெஸ்ட்லேண்ட் ஹெலிகாப்டர் ஒப்பந்த முறைகேடு தொடர்பாக கைது செய்யப்பட்டுள்ள இடைத்தரகர் கிறிஸ்டியன் மைக்கேலை, மேலும் 4 நாட்கள் காவலில் எடுத்து விசாரிக்க டெல்லி நீதிமன்றம் சிபிஐக்கு அனுமதி வழங்கியுள்ளது. 5 நாள் காவல் முடிந்ததை அடுத்து டெல்லி பாட்டியாலா ஹவுஸ் நீதிமன்றத்தில் அவரை சிபிஐ அதிகாரிகள் ஆஜர்படுத்தினர்.

அப்போது விமானப்படை அதிகாரிகள் 2 பேர் மற்றும் அவர்களது குடும்ப உறுப்பினர்கள் வெளிநாடு செல்வதற்கு விமான பயண செலவாக 92 லட்சம் ரூபாயை  2009 - 2013 ஆம் ஆண்டு காலகட்டத்தில் மைக்கேல் வழங்கியிருப்பது விசாரணையில் தெரியவந்துள்ளதாக சிபிஐ தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

மேலும் மைக்கேலை மும்பைக்கு அழைத்துச் சென்று விசாரணை நடத்த வேண்டியிருப்பதால் 5 நாட்கள் காவலை நீட்டிக்க அனுமதி கோரப்பட்டது. அதன்பேரில் 4 நாட்கள் காவலில் எடுத்து விசாரிக்க அனுமதி வழங்கிய நீதிமன்றம், மைக்கேலை சந்திக்க அனுமதிக்க வேண்டும் என்ற அவரது வழக்கறிஞரின் கோரிக்கையை நிராகரித்தது.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Tags : CPI , Christian Michel, AgustaWestland chopper case,
× RELATED பாஜ பிரமுகரின் உறவினர் வீட்டில்...