×

வங்கக்கடலில் உருவாகியுள்ள தாழ்வு மண்டலம் அடுத்த 12 மணி நேரத்தில் புயலாக மாற வாய்ப்பு: வானிலை மையம்

டெல்லி: வங்கக்கடலில் உருவாகியுள்ள ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் அடுத்த 12 மணி நேரத்தில் புயலாக மாற வாய்ப்பு உள்ளது என்று இந்திய வானிலை மையம் தகவல் தெரிவித்துள்ளது. மேலும் இந்த புயலானது நாளை மறுநாள் கரையை கடக்கும் என இந்திய வானிலை மையம் தெரிவித்துள்ளது. தற்போது ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமானது தென்கிழக்கு வங்கக்கடலில் மையம் கொண்டுள்ளது. தொடர்ந்து இது வடமேற்கு திசையை நோக்கி 11 கிமீ வேகத்தில் நகர்ந்து வருகிறது.

தபோதைய நிலைபவரப்படி சென்னையில் இருந்து 800 கிமீ கிழக்கு தென்கிழக்கு திசையிலும், ஆந்திர மாநிலம் மத்தினிப்படினத்தில் இருந்து தென் கிழக்கு திசையில் 990 கிமீ தொலைவிலும் இந்த புயலானது மையம் கொண்டுள்ளது. இன்னும் சில மணி நேரங்களில் இந்த ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமானது புயலாக வலுப்பெற வாய்ப்பு உள்ளதாக வானிலை மையம் தெரிவித்துள்ளது.  அதனை தொடர்ந்து 24 மணி நேரத்திற்குள் இந்த புயலானது தீவிர புயலாக வலுப்பெறும் எனவும் தெரிவித்துள்ளது. முன்னதாக இந்த புயல் சென்னைக்கும் தெற்கு ஆந்திராவுக்கும் இடையே கரையைக் கடக்கும் என்று கூறப்பட்டது.

ஆனால் கிழக்கில் இருந்து வீசும் காற்று, கடலின் வெப்ப நிலை போன்ற காரணகளால் இந்த புயலானது ஆந்திராவில் கரையை கடக்க வாய்ப்பு உள்ளதாக தெரிவித்துள்ளது. குறிப்பாக ஒம்பூர்-காக்கிநாடா இடையே 17ம் தேதி பிற்பகலில் கரையை கடக்கும் என தெரிவித்துள்ளது. இந்த புயலானது இன்னும் சற்று வலுப்பெறும் நிலையில் கடலோர பகுதிகளுக்கு கனமழைக்கு வாய்ப்பு உள்ளது. மேலும் இந்த புயலானது கரையை கடக்கும் வரை மீனவர்கள் கடலுக்கு செல்ல கூடாது என வானிலை மையம் தெரிவித்துள்ளது.


பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Tags : lowland zone ,storm ,Bay of Bengal ,weather center , Banking, Lowland, Storm Chance, Weather Center
× RELATED வங்கக்கடலில் உருவான ‘ரெமல்’ புயலால் மாமல்லபுரத்தில் பலத்த கடல் சீற்றம்