×

ஐயப்பா சேவா சங்கத்தின் 49ம் ஆண்டு மலர் பூஜை

சென்னை: சென்னை அண்ணாசாலை பார்டர் தோட்டம் ஐயப்பா சேவா சங்கம் சார்பில், ஐயப்ப சுவாமிக்கு 49ம் ஆண்டு மலர் பூஜை இன்று காலை தொடங்குகிறது. இதையொட்டி கணபதி ஹோமம், அபிஷேகம், அலங்காரம், மலர் பூஜை, புஷ்பாஞ்சலி, மகா தீபாரதனை, அன்னதானம், பிரசாதம் வழங்குதல், பக்தி பாடல், நாடக நிகழ்ச்சி உள்ளிட்டவை நடைபெறுகிறது.
மலர் பூஜைக்கு  ஐயப்பா சேவா சங்கத்தின் தலைவர் கே.தங்கவேல் குருசாமி தலைமை வகிக்கிறார். தமிழக சட்டப்பேரவை துணை சபாநாயகர் பொள்ளாச்சி வி.ஜெயராமன், கால்நடைத்துறை அமைச்சர் கே.ராதாகிருஷ்ணன் ஆகியோர் அன்னதான நிகழ்ச்சிைய தொடங்கி வைக்கின்றனர்.  ஐயப்பா சேவா சங்கத்தின் நிர்வாகிகள் பூஜை மற்றும் நிகழ்ச்சி ஏற்பாடுகளை செய்கின்றனர். ஐயப்ப பக்தர்கள், ஆன்மிக பெரியோர்கள், பார்டர் தோட்டம் வியாபாரிகள் உள்ளிட்ட பலர் கலந்துகொள்கின்றனர்.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Tags : Ayyappa Seva Sangham ,49th Annual Flower Pooja , Ayyappa Seva Sangham's, 49th Annual Flower Pooja
× RELATED 36 ஆண்டுகளுக்கு பிறகு நடக்கிறது மத்...