×

நான் இந்தியாவின் மகன் : செய்தியாளர்களின் கேள்விக்கு தலாய் லாமா பதில்

டெல்லி: புத்த மத துறவியும், திபெத்திய ஆன்மீக தலைவருமான தலாய் லாமா தாம் இந்தியாவின் மகன் என்று கூறியுள்ளார். தனது சிந்தனைகள் அனைத்தும் உலகிற்கே அறிவொளியை தந்த நாளந்தா பல்கலைக்கழகத்துடையது என தெரிவித்துள்ளார். அதே போல இந்தியாவின் பருப்பு,சப்பாத்தி மற்றும் தோசைகள் தான் எனக்கு உயிரோட்டம் தருகிறது. உடல் ரீதியாகவும், மன ரீதியாகவும் நான் இந்திய நாட்டைச் சேர்ந்தவனாகவே உணருகிறேன். அதனால் தான் நான் ஒரு இந்தியாவின் மகன் என கூறியுள்ளார்.

கடந்த 1949ம் ஆண்டு திபெத்தை சீனா ஆக்கிரமிப்பு செய்தது. திபெத்தை தனி நாடாக அறிவிக்க வேண்டும் என தலாய் லாமா போராடி வருகிறார்.  திபெத்தை ஆக்கிரமித்துள்ள சீனாவின் மிரட்டலுக்கு அடிபணியாமல், சீனாவை எதிர்த்து அறவழியில் போராடி வருகிறார் புத்த மத துறவியும், திபெத்திய ஆன்மீக தலைவருமான தலாய் லாமா. ஆனால் அவரது உயிருக்கு ஆபத்து ஏற்பட்டதை தொடர்ந்து, கடந்த 1958-ம் ஆண்டு திபெத்திலிருந்து வெளியேறினார். 1959ஆண்டு மார்ச் மாதம் இந்தியாவில் அடைக்கலம் புகுந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. இந்தநிலையில், சீனா மற்றும் அமெரிக்க ஊடகவியலாளர்கள் கேட்ட கேள்விகளுக்கு பதிலளித்த அவர், தான் இந்தியாவின் மகன் என கூறியுள்ளது குறிப்பிடத்தக்கது.


பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Tags : Dalai Lama ,journalists ,India , Buddhist monk, spiritual leader, Dalai Lama, son of India
× RELATED தலாய்லாமா குறித்து சர்ச்சை கருத்து நடிகை கங்கனாவுக்கு கருப்புக்கொடி