×

குன்னூர் அருகே முள்வேலியில் சிக்கி தப்பிய சிறுத்தை : வனத்துறையினர் எச்சரிக்கை

குன்னூர்: நீலகிரி மாவட்டம் குன்னுாரில் குடியிருப்பு பகுதியில் புகுந்த சிறுத்தை முள் வேலியில் சிக்கி கொண்டதால் பரபரப்பு  ஏற்பட்டது. குன்னூர் கோத்தகிரி சாலையில் வண்டிசோலை பகுதியில் இரை தேடிவந்த சிறுத்தை ஒன்று,அப்பகுதியில் உள்ள தனியார் பங்களாவிற்குள் நுழைய முயன்ற போது, முள்வேலியில் கால் சிக்கி கொண்டது. இதனால் சிறுத்தையால் ஓட முடியவில்லை. முள்வேலி கிழித்த காயம் காரணமாக சிறுத்தை உருமியபடி இருந்துள்ளது.

இதனை கண்ட அப்பகுதியை சேர்ந்த பொதுமக்கள் வனத்துறையினருக்கு தகவல் தெரிவித்தனர். குன்னூர் ரேஞ்சர் பெரியசாமி தலைமையிலான வனத்துறையினர், சம்பவ இடத்திற்கு சென்று கம்பி வேலியை அகற்றி சிறுத்தையை விடுவிக்க முயற்சி செய்தனர். ஆனால், அதற்குள் சிறுத்தை முள்கம்பியில் இருந்து கால்களை விடுவித்துக் கொண்டு காயத்துடன் வனத்திற்குள் ஓடி மறைந்தது. இந்த சிறுத்தை வண்டிசோலை மற்றும் சுற்று வட்டாரங்களில் நடமாடும் வாய்ப்புள்ளதால் பொதுமக்கள் கவனமுடன் இருக்குமாறும், குடியிருப்புகளை ஒட்டி சிறுத்தை மீண்டும் வந்தால் உடனடியாக தகவல் தெரிவிக்குமாறும் வனத்துறையினர் கேட்டுக் கொண்டுள்ளனர்.


பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Tags : thornbush ,Coonoor ,Forest Department , Coonoor, leopard, acrobatics
× RELATED கொல்லிமலை முதல் காந்திபேட்டை வரை புறவழி சாலை விரிவாக்க பணிகள் தீவிரம்