×

தேர்தலில் தோற்ற அதிர்ச்சி 2 தலைவர்களுக்கு ‘அட்டாக்’

ஐதராபாத்: தெலங்கானாவில் நடந்த சட்டப்பேரவை தேர்தலின் முடிவு நேற்று முன்தினம் அறிவிக்கப்பட்டது. இதில் காங்கிரஸ் சார்பில் நலகொண்டா தொகுதியில் போட்டியிட்ட கோமதி ரெட்டி வெங்கட் ரெட்டி, தெலங்கானா ராஷ்டிரிய சமிதி கட்சி வேட்பாளர் காஞ்சரலா பூபால் ரெட்டியிடம் 8,633 வாக்கு வித்தியாசத்தில் தோல்வி அடைந்தார். இந்த முடிவை கேட்டதும் திடீரென அவருக்கு ரத்த அழுத்தம் அதிகமாகி மயங்கி விழுந்தார். ஆதரவாளர்கள் அவரை மருத்துவமனையில் சேர்த்தனர்.

அதேபோல், தெலங்கானா ராஷ்டிரிய சமிதி கட்சியை சேர்ந்த முன்னாள் அமைச்சர் தும்மலா நாகேஸ்வர ராவ், பலாய்று தொகுதியில் காங்கிரஸ் வேட்பாளர் கண்டலா உபேந்திர ரெட்டியிடம் 7,669 வாக்கு வித்தியாசத்தில் எதிர்பாராத விதமாக தோற்றார். இந்த தோல்வியால் பெரும் அதிர்ச்சி அடைந்த அவருக்கு நெஞ்சு வலி ஏற்பட்டது. அவரும் சிகிச்சையில் சேர்க்கப்பட்டுள்ளார்.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Tags : election ,leaders , Election, Telangana
× RELATED தேர்தல் திருவிழாவில் ருசிகரம்!:...