×

வஉசி நகர் பிரேசர் பிரிட்ஜ் ரோடு தேர்வாணைய சாலை, டிஎன்பிஎஸ்சி ரோடு என பெயர் மாற்றம்: மாநகராட்சி ஆணையர் அறிவிப்பு

சென்னை: சென்னை மாநகராட்சி வஉசி நகரிலுள்ள பிரேசர் பிரிட்ஜ் ரோடு என்பது தமிழில் ‘‘தேர்வாணையச் சாலை’’ எனவும், ஆங்கிலத்தில் ‘‘டிஎன்பிஎஸ்சி ரோடு’’ எனவும் பெயர் மாற்றப்பட்டுள்ளது என்று மாநகராட்சி ஆணையர் கார்த்திகேயன் தெரிவித்துள்ளார்.இதுகுறித்து அவர் வெளியிட்ட அறிக்கை: சென்னை மாநகராட்சி, ராயபுரம் மண்டலம், வார்டு-59, வஉசி நகரிலுள்ள ‘‘பிரேசர் பிரிட்ஜ் ரோடு’’ என்பது தமிழில் ‘‘தேர்வாணையச் சாலை’’ எனவும், ஆங்கிலத்தில் ‘‘டிஎன்பிஎஸ்சி சாலை’’ எனவும் பெயர் மாற்றம் செய்யும் பொருட்டு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது.

சிறப்பு அதிகாரி மன்ற தீர்மானத்தின் அடிப்படையில்  பெயர் மாற்றம் செய்யப்பட்டுள்ளது.  பெயர் மாற்றம் செய்யப்பட்ட சாலைக்கான புதிய பெயர் பலகை வைக்க மாநகராட்சி மூலம் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.  இவ்வாறு மாநகராட்சி ஆணையர் கார்த்திகேயன் வெளியிட்ட அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.


பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Tags : Wuzi Nagar Fraser Bridge Road Selecting Road ,Corporation Commissioner ,TNPSC Road , WC Nagar Fraser Bridge Road, TNPC Road, Corporation Commissioner
× RELATED தேர்தல் நடத்தை விதிமுறைகள் முடிந்த...