×

பாகிஸ்தானில் நடைபெற்ற சார்க் மாநாட்டில் இருந்து இந்தியா வெளிநடப்பு

இஸ்லாமாபாத்: பாகிஸ்தான் நாட்டில் நடந்த சார்க் கூட்டத்தில் இருந்து இந்தியா வெளிநடப்பு செய்துள்ளது. ஆக்கிரமிப்பு காஷ்மீர் அமைச்சர் சவுத்ரி முகமது சயீத்தின் முன்னிலையில் சார்க் வர்த்தக மற்றும் தொழில்துறை கூட்டம் பாகிஸ்தானில் நடைபெற்றது. இதற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் சார்க் கூட்டத்தில் இந்தியா சார்பில் பங்கேற்ற இந்திய தூதரக அதிகாரி சுபம் சிங் கூட்டத்தை விட்டு வெளியேறினார்.

கடந்த 2016-ம் ஆண்டு பாகிஸ்தான் தலைநகர் இஸ்லாமாபாத்தில் சார்க் மாநாடு நடைபெற இருந்தது. அந்த ஆண்டு செப்டம்பர் மாதம் உரி பகுதியில் பாகிஸ்தான் பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் 19 இந்திய ராணுவ வீரர்கள் கொல்லப்பட்டனர். இதன் காரணமாக அப்போது பாகிஸ்தானில் நடப்பதாக இருந்த சார்க் மாநாட்டை இந்தியா புறக்கணித்தது. இந்தியாவின் நிலைப்பாட்டுக்கு ஆதரவாக சார்க் அமைப்பில் பங்கேற்றுள்ள ஆப்கானிஸ்தான், வங்காளதேசம், பூடான் ஆகிய உறுப்பு நாடுகளும் கூட்டத்தில் பங்கேற்க மறுத்துவிட்டது. இதனால் கடந்த சார்க் மாநாடு நிறுத்திவைக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Tags : India ,conference ,SAARC ,Pakistan , India,walked out,sAARC conference,Pakistan
× RELATED இட ஒதுக்கீட்டை மேம்படுத்தும்...