×

அரியானா முன்னாள் முதல்வர் சவுதாலாவின் மூத்த மகன் புதிய கட்சி தொடங்கினார்

ஜிந்த்: அரியானா மாநில முன்னாள் முதல்வர் ஓம் பிரகாஷ் சவுதாலாவின் மூத்த மகன் அஜய் சவுதாலா தலைமையில் புதிய கட்சி தொடங்கப்பட்டுள்ளது. அரியானாவில் கடந்த 2013ல் நடந்த ஆசிரியர் பணி நியமன முறைகேடு தொடர்பாக, முன்னாள் முதல்வர் ஓம்பிரகாஷ் சவுதாலா, அவரது மூத்த மகன் அஜய் சவுதாலா இருவரும் 10 ஆண்டு சிறை தண்டனையை அனுபவித்து வருகின்றனர். கடந்த மாதம் சவுதாலாவின் மகன்கள் அஜய் சவுதாலா, அபே சவுதாலா இடையே மோதல் ஏற்பட்டது. இதன் காரணமாக, இந்திய தேசிய லோக் தளம் கட்சியில் பிளவு ஏற்பட்டது. இந்நிலையில், அஜய் சவுதாலா தலைமையில் ‘ஜன்நாயக் ஜனதா கட்சி’ என்ற புதிய கட்சி நேற்று தொடங்கப்பட்டது. ஜிந்த் நகரில் நடந்த பிரமாண்ட பேரணியில் கட்சியின் பெயர் மற்றும் கட்சிக் கொடியை அஜய் சவுதாலாவின் மனைவியும் எம்எல்ஏவுமான நைனா சவுதாலா அறிமுகப்படுத்தினார். இதில், அஜய் சவுதாலாவின் மகன்கள் ஹிசார் எம்பி துஷ்யந்த் சவுதாலா மற்றும் திக்விஜய் சவுதாலா இருவரும் பங்கேற்றனர். இவர்கள் இருவரும் கடந்த அக்டோபர் மாதம் நடந்த கட்சி பேரணியில் அபே சவுதாலாவுக்கு எதிராக கோஷமிட்டதால் குடும்ப சண்டை பெரிதானது குறிப்பிடத்தக்கது.


பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Tags : Chautala ,Haryana ,party , Haryana, Chautala, New party
× RELATED கருணை மதிப்பெண் ரத்து செய்யப்பட்ட 1563 மாணவர்களுக்கு நாளை நீட் மறுதேர்வு