×

ஐக்கிய முற்போக்கு கூட்டணித் தலைவர் சோனியாவை சந்திக்க ஸ்டாலின் டெல்லி புறப்பட்டார்

சென்னை: ஐக்கிய முற்போக்கு கூட்டணித் தலைவர் சோனியாவை சந்திப்பதற்காக தி.மு.க. தலைவர் ஸ்டாலின் டெல்லி புறப்பட்டுச் சென்றார். காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகளின் தலைவர்கள் பங்கேற்கும் கூட்டம் டெல்லியில் நாளை நடைபெறுகிறது. மக்களவைத் தேர்தலில் பாஜகவுக்கு எதிராக வியூகம் அமைப்பது குறித்து இந்தக் கூட்டத்தில் ஆலோசனை நடத்தப்பட உள்ளது. இந்தக் கூட்டத்தில் பங்கேற்பதற்காக தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் இன்று காலை டெல்லி புறப்பட்டுச் சென்றார்.

ஐக்கிய முற்போக்கு கூட்டணித் தலைவர் சோனியாவிற்கு இன்று பிறந்தநாள் என்பதால், நேரில் சந்தித்து ஸ்டாலின் வாழ்த்து கூறுகிறார். வருகிற 16-ம் தேதி சென்னையில் நடைபெற உள்ள கலைஞர் சிலை திறப்பு விழாவிற்காக அழைப்பிதழையும் சோனியாவிடமும், காங்கிரஸ் தலைவர் ராகுல்காந்தியிடமும் அவர் வழங்குவார். முன்னதாக சென்னை விமான நிலையத்தில் செய்தியாளர்களிடம் பேசிய ஸ்டாலின், மேகதாது பிரச்சனையை சோனியாவிடமும், கர்நாடக முதலமைச்சர் குமாரசாமியை சந்திக்கும்போது அவரிடமும் வலியுறுத்த இருப்பதாக குறிப்பிட்டார்.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Tags : Stalin ,Sonia Gandhi ,Delhi ,UPA , Stalin,Delhi,meet,chairperson,Sonia Gandhi
× RELATED மாநிலங்களவை எம்.பி.யாக பதவியேற்றார் சோனியா காந்தி..!!