×

கஜா புயலால் பாதிக்கப்பட்ட பகுதியில் மூடப்பட்ட 200 டாஸ்மாக் கடைகள் மீண்டும் திறக்கப்படும்: அதிகாரி தகவல்

சென்னை: கஜா புயலால் பாதிக்கப்பட்ட டெல்டா மாவட்டங்களில் மூடப்பட்ட 200 டாஸ்மாக் கடைகளில் மின் சீரமைப்பு பணிகள் முடிந்தவுடன் மீண்டும் திறக்கப்படும் என டாஸ்மாக்  அதிகாரி ஒருவர் தகவல் தெரிவித்துள்ளார். கஜா புயல் கோரதாண்டவம் ஆடியதால் தஞ்சாவூர், திருவாரூர் மற்றும் நாகப்பட்டினம் உள்ளிட்ட டெல்டா மாவட்டங்கள் கடுமையாக பாதிக்கப்பட்டன. இப்பகுதியில் உள்ள வாழை, நெல்,  தென்னை உள்ளிட்டவைகள் அழிந்தன. புயல் பாதிகக்ப்பட்டு 22 நாட்கள் ஆனபிறகும் பல பகுதிகளில் இன்னும் மின்சாரம், குடிநீர், உணவு உள்ளிட்ட அடிப்படை வசதிகள் கிடைக்காமல்  மக்கள் தவித்து வருகின்றனர். கஜா புயல் காரணமாக தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம் மற்றும் புதுக்கோட்டை ஆகிய 4 மாவட்டங்களில் உள்ள டாஸ்மாக் கடைகள் மூடப்பட்டது.  

மேற்கண்ட 4 மாவட்டங்களிலும் 600க்கும் மேற்பட்ட டாஸ்மாக் கடைகள் மூடப்பட்டது. கடந்த 2ம் தேதி இயல்பு நிலை திரும்பி வரும் தஞ்சாவூர் டவுன், கும்பகோணம், பூதலூர் ஒன்றியம்,  திருவையாறு இடங்களிலும் மூடப்பட்ட 60 டாஸ்மாக் கடைகள் திறக்கப்பட்டது. மின்சார பணிகள் மறுபடியும் சீரமைக்கப்பட்டு விரைவில் 200 டாஸ்மாக் கடைகள் வரை விரைவில்  திறக்கப்பட உள்ளதாக டாஸ்மாக் அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் கூறியதாவது:கஜா புயலால் பாதிக்கப்பட்ட 4 மாவட்டங்களில் மின் இணைப்பு பணிகள் நடைபெற்று வருகிறது. பணி முடிந்ததும் அங்கு டாஸ்மாக் கடைகள் மீண்டும் திறக்கப்படும். இதுவரையில் 40 சதவீத  கடைகள் மூடப்பட்டுள்ளது. மின்சார பணிகள் சீரமைக்கப்பட்டு 4 மாவட்டங்களில் விரைவில் 200 டாஸ்மாக் கடைகள் திறக்கப்படும் என்றனர்.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Tags : stores ,Tazmak ,area ,Khajah ,storm , 200 Tazmak stores, area, Khajah storm,reopened,official information
× RELATED கோயம்பேடு சந்தையில், காய்கறிகளின் விலை 2 மடங்காக உயர்ந்ததால் மக்கள் வேதனை!