×

நீட் தேர்வுக்கு விண்ணப்பிக்க இன்று கடைசி நாள்

சென்னை: மருத்துவ படிப்பு படிக்க விரும்பும் மாணவர்கள் நீட் தேர்வுக்கு விண்ணப்பிக்க இன்று கடைசி நாள். கஜா புயலால் பாதிக்கப்பட்ட மாணவர்கள் நீட் தேர்வுக்கு விண்ணப்பிக்க கோரிக்கை விடுத்தனர். அதேபோல, நீட் தேர்வுக்கு விண்ணப்பிப்பதற்கான  உச்சபட்ச வயது வரம்பு தொடர்பாக, உச்ச நீதிமன்றத்தில் தொடரப்பட்ட வழக்கில், 25 வயதுக்கு மேற்பட்டவர்களும் விண்ணப்பிக்கலாம் என்றும், விண்ணப்பிப்பதற்கான காலஅவகாசத்தை ஒரு  வாரம் காலம் நீட்டிக்க நீதபதிகள் உத்தரவிட்டனர். அதன்படி, விண்ணப்பிக்க இன்று கடைசி நாளாக நிர்ணயிக்கப்பட்டது. விண்ணப்ப கட்டணத்தை செலுத்த நாளை கடைசி  நாளாகும். அதனால் மருத்துவம் படிக்க திட்டமிட்டு நீட் தேர்வுக்கு  விண்ணப்பித்தவர்கள் இன்றைக்குள் விண்ணப்பிக்கலாம்.



பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Tags : NEED SELECT,,last day
× RELATED ₹621 கோடி மதிப்பீட்டில், 3...