×

ராயப்பேட்டையில் பரபரப்பு பள்ளி மாணவர் காரில் கடத்தல்? : பெற்றோருக்கு பயந்து நாடகமா என போலீசார் விசாரணை

சென்னை: சென்னை சென்ட்ரல் மெட்ரோ ரயில் நிலையத்தில் மீட்கப்பட்ட பள்ளி மாணவன், 3 பேர் தன்னை காரில் கடத்தியதாக போலீசாரிடம் தெரிவித்துள்ளான். இது தொடர்பாக போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். சென்னை ராயப்பேட்டையை சேர்ந்தவர் தஸ்தகீர் பாஷா. இவர் தனியார் நிறுவனத்தில் வேலை ெசய்து வருகிறார். இவரது மகன் கவுஸ் பாஷா அதே பகுதியில் உள்ள தனியார் பள்ளியில் 9ம் வகுப்பு படித்து வருகிறார். இந்நிலையில் நேற்று முன்தினம் பள்ளிக்கு சென்றவர், இரவு வரை வீடு திரும்பவில்லை. நண்பர்கள், உறவினர்கள் வீட்டில் தேடியும் அவர் கிடைக்க வில்லை. இதையடுத்து தஸ்தகீர் பாஷா நேற்று முன்தினம் இரவு அண்ணா சாலை காவல் நிலையத்தில் மகன் மாயமானதாக புகார் அளித்தார். அதன்படி போலீசார் மாயமான பள்ளி மாணவனின் புகைப்படங்களை ைவத்து விசாரணை நடத்தி வந்தனர். இதற்கிடையே சென்னை சென்ட்ரல் மெட்ரோ ரயில் நிலையத்தில் சுற்றித்திரிந்த பள்ளி மாணவரை பிடித்து ரயில்வே போலீசார் விசாரணை நடத்தினர்.

அப்போது தன்னை பள்ளியில் இருந்து வீட்டிற்கு திரும்பும் போது மூன்று பேர் வழிமறித்து காரில் கடத்தியதாகவும், பிறகு கோயம்ேபடு அருகே இறக்கிவிட்டுவிட்டு சென்றதாகவும் தெரிவித்துள்ளார்.  மேலும் அதன் பிறகு ெமட்ேரா ரயில் மூலம் இங்கு வந்ததாக தெரிவித்துள்ளான்.  இதுகுறித்து ரயில்வே போலீசார் மாநகர காவல் துறைக்கு தகவல் கொடுத்தனர். அதன்படி அண்ணாசாலை போலீசார் பள்ளி மாணவனை மீட்டு சம்பவம் குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர். மாணவனை பணத்திற்காக யாரேனும் கடத்தினார்களா அல்லது வெறு ஒரு மாணவனை கடத்துவதற்கு பதில் கவுஸ் பாஷாவை கடத்தினார்களா என்ற கோணத்தில் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. இது ஒரு புறம் இருக்க மாணவன் சரியாக படிக்க மாட்டார் என்று கூறப்படுகிறது. இதனால் மாணவரே கடத்தல் நடந்ததாக நாடகமாடுகிறாரா என்ற கோணத்திலும் போலீசார் விசாரித்து வருகின்றனர்.


பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Tags : Royapettah ,parents , student school car , Royapettah , Police investigate ,parents are afraid to play
× RELATED பேரணி மூலம் பெற்றோர்களுக்கு...