×

கர்தார்பூருக்கு செல்ல சாலை அமைக்கும் திட்டம் 70 ஆண்டுகளுக்கு முன் செயல்படுத்தாதது ஏன்?: பிரதமர் மோடி கேள்வி

புதுடெல்லி: ‘‘கடந்த 70 ஆண்டுகளுக்கு முன்பே கர்தார்பூருக்கு சாலை அமைக்கும் பணியை மேற்கொள்ளாதது ஏன்? என காங்கிரக்கு பிரதமர் நரேந்திர மோடி கேள்வி எழுப்பியுள்ளார். ராஜஸ்தானில் நாளை மறுதினம் சட்டப்பேரவை தேர்தல் நடைபெற உள்ளது. இதனை முன்னிட்டு நடந்த பாஜ தேர்தல் பிரசார கூட்டத்தில் பிரதமர் மோடி கலந்து கொண்டார். அதில் அவர் பேசியதாவது: பஞ்சாப் மாநிலம், குருதாஸ்பூர் மாவட்டத்தில்  உள்ள குருத்வாராவில்  இருந்து பாகிஸ்தான் எல்லைப் பகுதியான கர்தார்பூரில்  உள்ள சீக்கியர்களின் புனித தலமான  சாஹிப் குருத்வாராவிற்கு இந்தியர்கள் பயணம்  செய்வதற்கு ஏதுவாக சாலை அமைக்கப்படுகிறது. இதற்காக அடிக்கல் நாட்டு விழா  கடந்த வாரம் நடந்தது. கர்தார்பூர் இன்று பாகிஸ்தானில் இருக்கிறது என்றால், அதற்கு காரணம் காங்கிரஸ்தான். ஏனென்றால், அப்போதைய  காங்கிரஸ் தலைவர்களுக்கு குருநானக் தேவின் முக்கியத்துவம் பற்றி தெரியவில்லை. சீக்கியர்களின் உணர்வுகளுக்கு அவர்கள் மதிப்பு அளிக்கவில்லை.

கடந்த காலங்களில் காங்கிரஸ் தவறுகளை எல்லாம் திருத்த வேண்டும் என்பதுதான் எனது விதி. கடந்த 5 ஆண்டுகளுக்கு முன்பு செய்தித்தாள்களில் ஊழல், மோசடி பற்றிய தலைப்பு செய்திகள் ஏராளமாக வந்து கொண்டிருந்தது. இப்போது அதுபோன்ற செய்திகளை நீங்கள் பார்த்திருக்கிறீர்களா? ஆற்றல் மிக்கவர்களாக விவசாயிகளை உருவாக்குவதற்கு எனது அரசு விரும்புகிறது. சோலார் பேனல்கள் அமைக்கவும், சொட்டு நீர் பாசனம் மற்றும் நவீன வழிமுறைகளை கையாளும்படி விவசாயிகள் கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள். விவசாயிகள் இப்போது அனுபவித்து வரும் வேதனைகளுக்கு காங்கிரஸ்தான் பொறுப்பேற்க வேண்டும். இவ்வாறு அவர் பேசினார்.

கடற்படைக்கு வாழ்த்து
கடந்த 1971ம் ஆண்டு இந்தியா - பாகிஸ்தான் போரின்போது கராச்சி அருகே பாகிஸ்தான் போர் கப்பல்களை இந்திய படைகள் மூழ்கடித்தன. இந்த வெற்றியியை கொண்டாடும் விதமாக ஒவ்வொரு ஆண்டும் டிசம்பர் 4ம் தேதி ‘இந்திய கடற்படை தினம்’ கடைப்பிடிக்கப்பட்டு வருகின்றது.  இதை முன்னிட்டு பிரதமர் மோடி டிவிட்டரில் வெளியிட்டுள்ள பதிவில், ‘நாட்டை பாதுகாக்கும் கடற்படைக்கு நன்றி தெரிவித்துக் கொள்கிறேன். பேரிடர் காலங்களில் நிவாரண பணிகளில் கடற்படை ஆற்றும் பங்கு மகத்தானது’ என்று கூறியுள்ளார்.

‘காய்ந்த மிளகாயை  பயிரிட சொல்வார்’
மோடி மேலும் பேசுகையில், ‘‘புகழை தேடி அலையும் அரசியல் வாரிசுக்கு சிவப்பு மிளகாய்க்கும், பச்சை மிளகாய்க்கும் உள்ள வித்தியாசம் தெரியாது. பச்சை மிளகாயை காட்டிலும் காய்ந்த மிளகாய் மூலம் விவசாயிகள் அதிக பணம் பெறுகிறார்கள் என்று நீங்கள் கூறினால், உடனே அவர், ‘விவசாயிகள் காய்ந்த மிளகாயை பயிர் செய்ய வேண்டும்’ என்று கூறுவார்’’ என்றார்.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Tags : Modi , The road project , Kardarpur,,Prime Minister?
× RELATED விரக்தியடைந்து, ஏமாற்றமடைந்துள்ள...