×

உ.பி. பாஜ எம்பி அடுத்த சர்ச்சை அனுமன் பிராமணர்கள் அடிமை: வால் எப்படி வந்தது என்றும் சந்தேகம்

லக்னோ: அனுமனை தலித் என்று உபி முதல்வர் யோகி கூறிய நிலையில், பாஜ எம்பி சாவித்ரி பாய் பூலே, அனுமனை மானுவாடி மக்களின் அடிமை என பேசியதால் சர்ச்சை ஏற்பட்டுள்ளது. ராஜஸ்தான் மாநிலம், ஆல்வார் மாவட்டம், மலகேடாவில் சமீபத்தில் தேர்தல் பிரசாரம் மேற்கொண்ட உத்தர பிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத், கடவுள் அனுமனை வனவாசி என்றும் தலித்’ என்றும் குறிப்பிட்டார். இது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. யோகியின் பேச்சை தொடர்ந்து அம்பேத்கர் சேனையின் தலைவர் சந்திரசேகர், ‘நாட்டில் உள்ள அனைத்து அனுமன் கோயில்களையும் தலித்துகள் தங்கள் கட்டுப்பாட்டில் கொண்டு வரவேண்டும். அங்கு தலித் மக்களையே அர்ச்சர்களாக நியமிக்க வேண்டும்’ என்று வலியுறுத்தினார்.

மேலும், தேசிய சிறுபான்மை ஆணையத்தின் தலைவரும், ‘அனுமன் தலித் அல்ல; பழங்குடி இனத்தை சேர்ந்தவர்’ என்றார். யோகியின் கருத்துக்கு உபி எம்எலஏ. அமைச்சரும் கூட எதிர்ப்பு தெரிவித்தனர்.   இந்நிலையில், உத்தரபிரதேச மாநிலம் பக்ரைச் தொகுதி பாஜ பெண் எம்பி சாவித்ரி பாய் பூலே,  செய்தி நிறுவனத்திற்கு நேற்று அளித்த பேட்டியில், ‘‘தலித், பிற்படுத்தப்பட்ட மக்கள் குரங்குகள் மற்றும் ராட்சதர்கள் என அழைக்கப்படுகின்றனர்.

அனுமன் தலித் பிரிவை சேர்ந்தவர். அதே நேரம் அவர் மனுவாடி மக்களின் (பிராமணர்கள்) அடிமையாகவும் விளங்கினார். அவர் கடவுள் ராமனுக்காக அனைத்தையும் செய்தார் என்றால், அவருக்கு ஏன் வால் இருந்தது? அவரது முகம் கருப்பாக இருந்தது ஏன்? குரங்கை போல் இருந்தது ஏன்? அவர் ராமர் மீது பக்தி ெகாண்டிருந்தார் என்றால், அவர் மனிதராக இருந்திருக்க வேண்டும்.  நம்மால் ஏன் தலித்துகளை மனிதர்களாக கருத முடியவில்லை? நமது நாட்டுக்கு கோயில் தேவையில்லை. கோயில் மூலம் பிராமணர்கள்தான் பலன் அடைகிறார்கள்.

வெறும் 3 சதவீதம் உள்ள அவர்கள் கோயிலில் கிடைக்கும் பணத்தை கொண்டு பலன் அடைகிறார்கள். நமது தலித் சமூகத்தை அடிமைகளாக மாற்றுகிறார்கள். நமக்கு அரசியலமைப்பு அடிப்டையிலான உரிமை தேவை’’ என்றார். இவருடைய பேச்சு, யோகி கிளப்பி விட்ட சர்ச்சையை மேலும் தீவிரமாக்கி இருக்கிறது.


பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Tags : dispute ,slave ,Hanuman Brahmins , UP Bhaj MP, Hanuman Brahmins slave, tail
× RELATED கொடுங்கையூர் டாஸ்மாக் கடையில் தகராறு...