×

கல்லூரி மாணவிகளை தவறாக வழிநடத்திய வழக்கு: நிர்மலாதேவி ஜாமின் மனுவை நிராகரித்தது ஸ்ரீவில்லிபுத்தூர் நீதிமன்றம்

மதுரை: கல்லூரி மாணவிகளை தவறாக வழிநடத்த முயன்றதாக தொடரப்பட்ட வழக்கில் இருந்து விடுவிக்கக் கோரி பேராசிரியை நிர்மலா தேவி உள்ளிட்டோர் தாக்கல் செய்த மனுக்களை ஸ்ரீவில்லிபுத்தூர் நீதிமன்றம் தள்ளுபடி செய்துள்ளது. விருதுநகர் மாவட்டம், அருப்புக்கோட்டை தனியார் கல்லூரி பேராசிரியை நிர்மலாதேவி மாணவிகளை தவறான பாதைக்கு அழைத்த விவகாரத்தில் கைது செய்யப்பட்டார். இவருக்கு உடந்தையாக இருந்த பேராசிரியர் முருகன், ஆராய்ச்சி மாணவர் கருப்பசாமி ஆகியோரும் கைது செய்யப்பட்டனர். பின்பு இந்த வழக்கு சி.பி.சி.ஐ.டி போலீசாரால் விசாரிக்கப்பட்டு வந்தது. மேலும் இது தொடர்பான குற்றப்பத்திரிகையை சிபிசிஐடி போலீசார் ஸ்ரீவில்லிபுத்தூர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்தனர். இந்த நிலையில் எங்கள் மீது அரசு தரப்பு குற்றம் சாட்டுவதில் எந்த முகாந்திரமும் இல்லை.

எனவே வழக்கில் இருந்து விடுவிக்க வேண்டும் என நிர்மலாதேவி ஸ்ரீவில்லிபுத்தூர் கோர்ட்டில் மனு தாக்கல் செய்தார். இதே கோரிக்கையை வலியுறுத்தி முருகன், கருப்பசாமியும் மனு தாக்கல் செய்தனர். இந்த வழக்கு இன்று ஸ்ரீவில்லிபுத்தூர் கோர்ட்டில் விசாரணைக்கு வந்தது. அப்போது நிர்மலாதேவியை வழக்கில் இருந்து விடுவிக்க அரசு தரப்பில் கடும் எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டதாக கூறப்படுகிறது. இதையடுத்து வழக்கில் இருந்து விடுவிக்க கோரிய நிர்மலாதேவியின் மனுவை மாஜிஸ்திரேட்டு தள்ளுபடி செய்தார். இதனை தொடர்ந்து முருகன், கருப்பசாமியின் மனுவும் நிராகரிக்கப்பட்டது. தொடர்ந்து வழக்கின் மூல விசாரணையை நீதிபதி வருகிற 7-ந்தேதிக்கு ஒத்திவைத்தார். இதுவரை 6 முறை ஜாமின் கேட்டு நிர்மலாதேவி மற்றும் கருப்புசாமி, முருகன் ஆகியோர் மனு தொடர்ந்துள்ளனர். அவர்களின் அனைத்து மனுக்களையும் நீதிமன்றம் நிராகரித்தது குறிப்பிடத்தக்கது.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Tags : Niramaladevi ,court ,Srivilliputur , Nirmaladevi,court,petition dismiss,Srivilliputhur
× RELATED மாணவிகளை தவறாக வழிநடத்திய வழக்கு:...