×

காப்பகத்தில் தங்கி படித்த மாணவிக்கு பாலியல் தொல்லை அரசுப்பள்ளி ஆசிரியருக்கு 7 ஆண்டுகள் சிறை: மாணவிக்கு 4 லட்சம் இழப்பீடு

திருவண்ணாமலை: ஆதரவற்றோர் காப்பகத்தில் தங்கி படித்த 9ம் வகுப்பு மாணவிக்கு பாலியல் தொல்லை கொடுத்த, அரசு பள்ளி ஆசிரியருக்கு 7 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து திருவண்ணாமலை மகளிர் கோர்ட் தீர்ப்பு  அளித்தது.திருவண்ணாமலையில் உள்ள அடிஅண்ணாமலை அரசு பள்ளியில் 9ம் வகுப்பு படித்தவர் 14 வயது மாணவி. இவர், அதே பகுதியில் உள்ள ஒரு தனியார் காப்பகத்தில் தங்கியிருந்து படித்து வந்தார். பெற்றோரை இழந்து, ஆதரவற்ற  நிலையில் சாலையோரத்தில் பிச்சை எடுத்துக்கொண்டிருந்த இந்த மாணவி, தனது 5 வயதில் மீட்கப்பட்டு காப்பகத்தில் சேர்க்கப்பட்டவர்.இந்நிலையில், கடந்த 19.2.2013 அன்று பள்ளிக்கு சென்ற மாணவி காப்பகம் திரும்பவில்லை.

பல இடங்களில் தேடப்பட்ட நிலையில் மறுநாள் அதிகாலை மீண்டும் காப்பகத்துக்கு வந்தார். தொடர்ந்து, தன்னுடைய வகுப்பு ஆங்கில  பாட ஆசிரியரான பெ.சவுந்திரராஜன்(34) என்பவர், காப்பகத்துக்கு அருகேயுள்ள அவரது வாடகை வீட்டுக்கு, டியூஷன் சொல்லித் தருவதாக அழைத்துச் சென்று,  வீட்டில் அடைத்து வைத்து பாலியல் தொல்லை கொடுத்ததாகவும்,  பைக்கில் அழைத்து வந்து கிரிவலப்பாதையில் காப்பகத்துக்கு அருகே விட்டுவிட்டு சென்றதாகவும் தெரிவித்தார். புகாரின்படி திருவண்ணாமலை மகளிர் போலீசார் போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிந்து, ஆசிரியர்  சவுந்திரராஜனை கைது செய்தனர். பின்னர், அவர் சஸ்பெண்ட் செய்யப்பட்டார். இந்த வழக்கை மாவட்ட மகளிர் விரைவு நீதிமன்ற நீதிபதி எஸ்.நடராஜன் விசாரித்து, ஆசிரியர் சவுந்திரராஜனுக்கு, 7 ஆண்டுகள் சிறை தண்டனையும்,  ₹10 ஆயிரம் அபராதமும் விதித்தும், பாதிக்கப்பட்ட மாணவிக்கு ₹4 லட்சம் இழப்பீடு வழங்கவும் நேற்று உத்தரவிட்டார்.




பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Tags : teacher ,incubator , Sexually harassed ,student, incubator,teacher school
× RELATED இடை நிலை ஆசிரியர் தேர்வு ஒத்திவைப்பு: ஆசிரியர் தேர்வு வாரியம் அறிவிப்பு