×

அமைச்சர் முன்னிலையில் பேச்சுவார்த்தை போராட்டம் தற்காலிக ஒத்திவைப்பு: மாற்றுத்திறனாளிகள் சங்கங்களின் கூட்டமைப்பு அறிவிப்பு

சென்னை: சமூக நலத்துறை அமைச்சர் முன்னிலையில் பேச்சுவார்த்தை உடன்பாடு ஏற்பட்டத்தையடுத்து போராட்டம் தற்காலிக ஒத்திவைப்பதாக மாற்றுத்திறனாளிகள் சங்கங்களின் கூட்டமைப்பு அறிவித்துள்ளது. தமிழக அரசு துறைகளில் 2 ஆண்டுக்கு மேல் பணியாற்றும் மாற்றுதிறனாளிகளுக்கு தற்காலிக ஊழியர்களை நிரந்தரம் செய்து காலமுறை ஊதியத்தின் கீழ் கொண்டுவர வேண்டும் உள்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி  உலக மாற்றுத்திறனாளிகள் தினத்தை துக்க தினமாக அனுசரிக்கப்படும் என்று மாற்றுத்திறனுடையோர் சங்கங்களின் கூட்டு இயக்ககம் எச்சரித்திருந்தது. இதைத் தொடர்ந்து மாற்றுதிறனாளிகள் ஆணையத்தின் ஆணையர்  மகேஸ்வரி நேற்றுமுன்தினம் அவர்களை பேச்சுவார்த்தைக்கு வருமாறு அழைத்தார். அப்போது அவர்கள் செயலாளரிடம் தான் பேச்சுவார்த்தை நடத்துவோம் என்று மாற்றுதிறனாளிகள் சங்கத்தினர் அறிவித்தனர். அவருக்காக  அவர்கள் காத்திருந்தனர்ஆனால், அவர் வரவில்லை. இதைத் ெதாடர்ந்து திட்டமிட்டப்படி போராட்டம் நேற்று மெரினா பீச் சாலையில்  உள்ள மாற்றுதிறனாளிகள் ஆணையர் அலுவலகம் முன்பு நடைபெற்றது. பின்னர் போராட்டத்தில் ஈடுபட்டவர்களிடம்  சமூக நலத்துறை அமைச்சர் அவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர்.  

பின்னர் மாற்றுத்திறனாளிகள் சங்கங்களின் கூட்டியக்கம் சார்பாக நிருபர்களிடம் கூறியதாவது: மாற்றுத் திறனாளிகளுக்கான உரிமைச்சட்டம் 2016 கீழ் உருவாக்கப்பட்ட விதிமுறைகள் தவறாகவும், மோசடியாகவும் இருப்பதை  கண்டித்து போராட்டம் நடத்தினோம். அதன்படி அமைச்சர் முன்னிலையில் பேச்சுவார்த்தை நடைபெற்றது. அப்போது விதிமுறைகள் மறுஆய்வுக்கு உட்படுத்தப்படுவதாகவும், 2 ஆண்டுகளுக்கு மேல் தொகுப்பூதியத்தில் வேலை செய்யும் மாற்றுத்திறனாளிகளுக்கு நிரந்தர பணி வழங்க வேண்டும் என்று கோரியிருந்தோம் அதை தலைமை  செயலாளரிடம் தெரிவித்து அனைத்து செயலாளரின் தலைமையில் கூட்டம் விரைவில் நடத்தப்படுவதாகவும் கூறினார்.மேலும் மாற்றத்திறனாளிகளுக்கு 2 ஆணையர் இருக்க வேண்டும் சட்டத்திற்கு ஒன்று திட்டத்திற்கு ஒன்று  இருக்க வேண்டும் கோரிக்கை வைத்தோம். இப்போது இரண்டு ஆணையரும் ஒரே ஆணையராக போடப்பட்டிருக்கும் அரசு உத்தரவை நிறுத்தி வைப்பதாகவும் அதன்பிறகு பேச்சுவார்த்தை நடத்திய பிறகு உத்தரவு  செயல்படுத்தப்படும் என்று கூறினார். மீண்டும் 17ம் தேதி மேல் அமைச்சர் தலைமையில் மறு ஆய்வு செய்வோம் என்று கூறினார். அவரின் வாக்கை நம்பி தற்காலிக போராட்டத்தை நிறுத்தி வைத்துள்ளோம். இவ்வாறு அவர்கள்  கூறினர்.



பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Tags : Cabinet reshuffle , Negotiation , presence , Minister, Announcement , Disability Societies
× RELATED ஊரடங்கை நீட்டிப்பது குறித்து...