×

எண்ணெய் உற்பத்தி நாடுகளின் ஒபெக் அமைப்பில் இருந்து வெளியேறுகிறது கத்தார்

தோகா: ஒபெக் கூட்டமைப்பில் இருந்து ஜனவரி முதல் விலகப்போவதாக கத்தார் திடீர் அறிவிப்ைப வெளியிட்டுள்ளது.  சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை கடும் சரிவை சந்தித்ததால், இவற்றின் உற்பத்தியை குறைக்க எண்ணெய் உற்பத்தி நாடுகள் முடிவு செய்துள்ளன. இதை தொடர்ந்து எண்ணெய் உற்பத்தி நாடுகள் கூட்டமைப்பான ‘ஒபெக்’ இந்த வாரம் ஆலோசனை நடத்துகின்றன. இந்த கூட்டமைப்பில் கத்தாரும் உள்ளது.  தீவிரவாதிகளுக்கு கத்தார் நாடு தஞ்சம் தருவதாக குற்றச்சாட்டு நிலவி வருகிறது. இதனால், ஐக்கிய அரபு எமிரேட், சவூதி அரேபியா, பஹ்ரைன், எகிப்து ஆகிய நாடுகள் கத்தாருடனான தூதரக உறவை துண்டித்தன. விமான போக்குவரத்தும் நிறுத்தப்பட்டது.

அரபு நாடுகள் வழியாகத்தான் பொருட்கள் கொண்டு செல்ல முடியும் என்பதால், மேற்கண்ட நடவடிக்கையால் கத்தார் பொருளாதாரம் வெகுவாக பாதிப்பு அடைந்தது. ஆனால் அமெரிக்காவும், ரஷ்யாவும் தலையிட்டு இதற்கு தீர்வு ஏற்படுத்தின.  இந்த சூழ்நிலையில், கத்தார் எரிசக்தி விவகார அமைச்சர் சாத் அல் காபி ேநற்று கூறுகையில், ‘‘ஒபெக் கூட்டமைப்பில் இருந்து 2019 ஜனவரியில் முதல் வெளியேறுவதற்கு கத்தார் முடிவு செய்துள்ளது. இந்த முடிவு ஒெபக் கூட்டமைப்புக்கும் தெரிவிக்கப்பட்டுள்ளது. கடந்த 57 ஆண்டுகளாக ஒபெக் அமைப்பில் கத்தார் உள்ளது.

ஜனவரியில் வெளியேறுவதால், இந்த வாரம் வியாழன் மற்றும் வெள்ளிக்கிழமையில் நடக்கும் ஒபெக் கூட்டத்தில் கத்தார் பங்கேற்கும்’’ என்றார்.
 கத்தார் நாள் ஒன்றுக்கு 600,000 பேரல் கச்சா எண்ணெய் உற்பத்தி செய்கிறது. ஆனால், ஆண்டுக்கு 77 மில்லியன் டன் உற்பத்தியுடன் திரவ இயற்கை எரிவாயு உற்பத்தியில் முக்கிய நாடாக விளங்குகிறது.  ஆனால், இந்த முடிவில் அரசியல் பின்னணி எதுவும் இல்லை. இயற்கை எரிவாயு உற்பத்தியை 2024ல் ஆண்டுக்கு 110 மில்லியன் டன் என்ற அளவுக்கு உயர்த்தி, எரிவாயு உற்பத்தி துறையை மேம்படுத்துவதில் கவனம் செலுத்தப்படும் என அல் காபி தெரிவித்தார்.



பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Tags : Qatar ,Obec ,countries , Oil, Qatar
× RELATED பிஸ்தா பற்றி தெரிந்து கொள்ளலாம்…