×

பொங்கல் பண்டிகைக்கு 45 நாட்களுக்கு முன்பே செங்கரும்பு விற்பனை துவங்கியது

கரூர்: தை மாதம் பொங்கல் பண்டிகையின் போது,  மக்களால் விரும்பி வாங்கப்படும் பொருட்களில் கரும்பும் ஒன்று. பொங்கலுக்கு  இன்னும் ஒன்றரை மாதம் இருக்கும் நிலையில்  இப்போதே திருச்சி, நாமக்கல், திண்டுக்கல், புதுக்கோட்டை ஆகிய மாவட்ட பகுதிகளில் இருந்து மொத்தமாக கரும்புகள் கொண்டு வரப்பட்டு விற்பனை செய்யப்பட்டு வருகிறது.கரூரில் ஆசாத் சாலை, மார்க்கெட், ஜவஹர் பஜார், சர்ச் கார்னர் ஆகிய பகுதிகளில் கரும்பு வியாபாரம் நடந்து வருகிறது. கரூர் நகராட்சிக்குட்பட்ட வெங்கமேடு கடைவீதியில் கடந்த இரண்டு நாட்களாக கரும்பு கொண்டு வரப்பட்டு விற்பனை செய்யப்பட்டு வருகிறது.

நாமக்கல் மாவட்டம் கொல்லிமலை பகுதியில் இருந்து இந்த கரும்புகள்  கொண்டு வரப்பட்டு ஜோடி ரூ.80க்கு விற்பனை செய்யப்படுகிறது. பொங்கல் பண்டிகையின்போது, இதன் தேவையும் அதிகரிக்கும், விலையும் கூடுதலாக இருக்கும். பொங்கலுக்கு முன்னதாகவே, வெங்கமேட்டில் கரும்பு விற்பனை செய்யப்படுவதால் பெரும்பாலானோர் ஆவலுடன்  கரும்பு வாங்கி செல்கின்றனர். இதுபோல அனைத்து கிராமங்களிலும் வார சந்ததைகளிலும் கரும்பு விற்பனை அமோகமாக நடந்து வருகிறது.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Tags : pigeon sale ,festival ,Pongal , Pongal festivals, sale of brick
× RELATED மணப்பாறை வேப்பிலை மாரியம்மன்...