இந்திய அணி ஆல் ரவுண்டர் ஹர்திக் பாண்டியா காயம் காரணமாக ஓய்வெடுத்து வந்தார். தற்போது விளையாடத் தயாராகி உள்ள அவர், ரஞ்சி கோப்பையில் விளையாடி உடல்தகுதியை நிரூபிக்க வேண்டும் என பிசிசிஐ கேட்டுக் கொண்டது. இதையடுத்து, மும்பை அணிக்கு எதிராக வாங்கடே மைதானத்தில் டிச. 14ம் தேதி தொடங்கும் ஏ பிரிவு லீக் ஆட்டத்தில் பரோடா அணிக்காக ஹர்திக் களமிறங்க உள்ளார். இது குறித்து தனது ட்விட்டர் பக்கத்தில் தகவல் பதிந்துள்ள அவர், ‘மீண்டும் களத்துக்கு திரும்ப உள்ளது மகிழ்ச்சி அளிக்கிறது. ரஞ்சி சவாலை எதிர்கொள்ள தயார்’ என்று தெரிவித்துள்ளார்.
பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி