×

மக்களை பயமுறுத்தவே புற்றுநோய் வதந்தி: சூர்யகலா, ஸ்டெர்லைட் ஆலை ஊழியர்

ஸ்டெர்லைட் ஆலை குறித்து வதந்திகளை மட்டும் நம்பி ஆய்வு அறிக்கை இல்லாமல், அறிவியல் சார்ந்த உண்மைகளை ஆய்வுப்பூர்வமான அடிப்படையில் இந்த அறிக்கை அமைந்துள்ளது மிகவும் மகிழ்ச்சியாக உள்ளது. தூத்துக்குடியை பொறுத்தவரையில், 22 ஆண்டுகள் தூத்துக்குடியின் வளர்ச்சி, ஸ்டெர்லைட் ஆலை உடன் சேர்ந்து தொடர்ந்துள்ளது என்று தான் சொல்ல வேண்டும். ஸ்டெர்லைட் ஆலை தான் பொருளாதார வளர்ச்சியில் தூத்துக்குடியில் முக்கிய பங்கு வகிக்கிறது. அது, தூத்துக்குடியில் உள்ள எல்லோருக்கும் தெரிந்த உண்மை தான். ஸ்டெர்லைட் ஆலை ஊழியர்களின் வாழ்வாதாரம் காப்பாற்றப்பட்டுள்ளது என்பதை இந்த அறிக்கையின் மூலம் பார்க்கிறோம். வெறும் பணத்தை சம்பாதிப்பதற்காக வதந்தியை கிளப்பி போராட்டத்தை நடத்தி வருகின்றனர். வதந்தியை கிளப்பியவர்களுக்கு இப்போதும் பணம் வந்து கொண்டு தான் இருக்கிறது. உண்மை என்ன என்பதை அறிவியல் ஆய்வு மூலம் புரிந்து கொள்ள வேண்டும். தமிழகத்தில் இந்த போராட்டத்தால் முதலீடுகள் குறையும் வாய்ப்ைப ஏற்படுத்தியது. ஆனால், பசுமை தீர்ப்பாய அறிக்கை மூலம் தமிழகத்தில் முதலீடு செய்யலாம் என்ற நம்பிக்கையை முதலீட்டாளர்கள் மத்தியில் ஏற்பட்டுள்ளது.

 ஸ்டெர்லைட் ஆலையில் 3 ஆயிரம் பேர் பணிபுரிகின்றனர். இதில், ஒப்பந்த அடிப்படையில் 2 ஆயிரம் பேரும், நேரடியாக 800 பேரும் வேலை செய்கின்றனர். இந்த பணியாளர்கள் பல ஆண்டுகளாக பணிபுரிந்து வருகின்றனர். எங்களுக்கு புற்றுநோய் வரும் என்றால், நாங்கள் எப்படி ஸ்ெடர்லைட் ஆலையில் போய் வேலை செய்வோம். நாங்கள் தினமும் வேலை செய்கிறோம். ஆனால், எங்களுக்கு எந்த விதமான பாதிப்பும் இல்லையே. ஸ்டெர்லைட் ஆலையில் பணிபுரிய பலரும் காத்து ெகாண்டு தான் இருக்கிறார்கள். இங்கிருந்து யாரும் வேலையை விட்டு செல்லவில்லை. ஒரு இடத்திற்கு போனால் புற்றுநோய் வரும் என்றால் யார் வருவார்கள். இதை வைத்து மக்கள் புரிந்து கொள்ள வேண்டும். புற்றுநோய் என்றால் மக்களுக்கு பெரிய பயம். அந்த நோயை பார்த்து எல்லோரும் பயந்து போவதால், இதை பயன்படுத்தி சிலர் வதந்தியை பரப்புகின்றனர்.  ஒரு சிலர் கிளப்பி வரும் வதந்தியை நம்பி ஸ்டெர்லைட் ஆலையை பற்றி மக்கள் தவறாக எண்ணுகின்றனர்.

ஸ்டெர்லைட் ஆலை இயங்காததால் காற்று மாசு குறைந்துள்ளது என்று ஒரு நாள் கணக்கெடுப்பை வைத்து இப்படி கூறுகின்றனர். ஸ்டெர்லைட் ஆலை இயங்கிய போதும், மூடிய பிறகும் என்று 6 மாத அறிக்கையை எடுத்து, அதை வைத்து காற்று மாசு ஏற்பட்டுள்ளதா என்பதை பார்த்து இருக்க வேண்டும். பாதிப்பு ஏற்படும் என்று தீவிர ஆய்வு மூலமாக தெரிவிக்காமல் கூறுவதை தான் நாங்கள் வதந்தி என்று கூறுகிறோம். மக்களை பயமுறுத்துவதற்காக இது போன்ற பரப்புரைகளில் ஈடுபடுகின்றனர். இந்த வதந்தியால் போராட்டத்தை வைத்து பணம் சம்பாதிப்பவர்களுக்கு தான் பயனாக உள்ளது.

ஆனால், தூத்துக்குடி மக்களின் பொருளாதார வளர்ச்சி தான் குறைந்து விட்டது. ஸ்டெர்லைட் ஆலை மூடிய பிறகு அரசுக்கு கிடைக்க  வேண்டிய வரி வருவாயும் பாதிக்கப்பட்டுள்ளது. இந்த ஆலையை நம்பி நேரடியாக, மறைமுகமாக உள்ள பல்லாயிரக்கணக்கான மக்கள் வாழ்வாதாரத்தை இழந்து தவிக்கின்றனர். ஸ்டெர்லைட் ஆலை நிச்சயம் திறப்பார்கள். எங்களது ஆலை சார்பில் ேநரடியாக பணிபுரிந்து வரும் ஊழியர்களுக்கு மட்டுமே ஊதியம் தருகின்றனர். தூத்துக்குடியில் பணிபுரிந்து வந்த பலரை இங்கிருந்து பணியிட மாற்றம் செய்துள்ளனர். எங்களுடைய வாழ்வாதாரத்தை முழுவதுமாக இழக்காமல் இருக்க ஆலை நிர்வாகம் உதவி செய்து வருகிறது.


பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Tags : plant employee , Cancer,threatened,people,Suryakala,sterile plant,employee
× RELATED புதுக்கோட்டை சிவபுரத்தில் ஓய்வுபெற்ற...