×

நீர்வள ஆதாரங்களை பாதுகாத்தல், நதிகள் சீரமைப்பு கழகத்தை எதிர்த்து பொறியாளர்கள் உண்ணாவிரதம்: சங்க கூட்டத்தில் முடிவு

சென்னை: தமிழ்நாடு நீர்வள ஆதாரங்களை பாதுகாத்தல் மற்றும் நதிகள் சீரமைப்பு கழகத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து, பொறியாளர் சங்கம் சார்பில் ஒருநாள் அடையாள உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட முடிவு செய்திருப்பதாக கூறப்படுகிறது. தமிழ்நாடு நீர்வள ஆதாரங்களை பாதுகாத்தல் மற்றும் நதிகளை சீரமைக்கும் பணிகளை செயல்படுத்த தமிழ்நாடு நீர்வள ஆதாரங்களை பாதுகாத்தல் மற்றும் நதிகள் சீரமைப்பு கழகம் என்ற அமைப்பு ஏற்படுத்தி கடந்த அக்டோபர் மாதம் தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ளது.

இதன் தற்காலிக தலைவராக விபு நய்யார் நியமிக்கப்பட்டுள்ளார். இந்த கழகம் மூலம் அனைத்து திட்டப்பணிகளும் மேற்கொள்ளப்பட இருப்பதால், நீர்வளப்பிரிவுக்கு மூடு விழா காண வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளது.தமிழகத்தில் பொதுப்பணித்துறை ெபாறியாளர் சங்கத்தின் பல்வேறு கிளைகள் சார்பில் நதிகள் சீரமைப்பு கழகத்திற்கு எதிராக உண்ணாவிரத போராட்டம் நடத்த வேண்டும் என்ற கோரிக்கையை வலியுறுத்தி தீர்மானம் போடப்பட்டுள்ளது. இதை தொடர்ந்து பொறியாளர் சங்கத்தின் சார்பில் நதிகள் சீரமைப்பு கழகத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து விரைவில் ஒருநாள் அடையாள உண்ணாவிரத போராட்டம் நடத்த திட்டமிட்டு இருப்பதாக கூறப்படுகிறது.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Tags : Engineers Fasting Against Raising Reconnaissance Corporation , Protecting,Water Resources,Engineers,Fasting,Against,Raising Reconnaissance Corporation
× RELATED ₹621 கோடி மதிப்பீட்டில், 3...