×

பிரமோஸ் ஏவுகணை, 2 போர்க்கப்பல்கள் உட்பட ராணுவத்துக்கு 3,000 கோடிக்கு தளவாடங்கள் வாங்க அனுமதி: பாதுகாப்பு அமைச்சகம் வழங்கியது

புதுடெல்லி: இந்திய ராணுவத்திற்கு ரூ.3,000 கோடியில் ஆயுதங்கள், தளவாடங்கள் கொள்முதல் செய்ய பாதுகாப்புத் துறை அமைச்சகம் ஒப்புதல் அளித்துள்ளது.   பாதுகாப்புத் துறை கொள்முதல் கவுன்சில் கூட்டம், பாதுகாப்பு அமைச்சர் நிர்மலா சீதாராமன் தலைமையில் நேற்று நடைபெற்றது. இதில், ராணுவ தளவாடங்களை ரூ.3000 கோடிக்கு கொள்முதல் செய்வதற்கு ஒப்புதல் அளிக்கப்பட்டது. இது தொடர்பாக ராணுவ மூத்த அதிகாரி ஒருவர் கூறியதாவது:  இந்திய கடற்படையை சேர்ந்த 2 போர் கப்பல்களுக்கு பிரமோஸ் ஏவுகணைகள் தேவை என்றும், ராணுவத்தின் முக்கிய பீரங்கி வாகனமான அர்ஜூனுக்கு மீட்பு வாகனங்கள் வாங்க வேண்டும் என்றும் பாதுகாப்புத் துறை அமைச்சகத்தின் கொள்முதல் கவுன்சில் கோரிக்கை விடுத்தது.

இதையடுத்து, பாதுகாப்பு துறை அமைச்சர் நிர்மலா சீதாராமன் தலைமையில் நடைபெற்ற கொள்முதல் கவுன்சில் கூட்டத்தில், ரூ.3,000 கோடி மதிப்பிலான தளவாடங்களை வாங்க ஒப்புதல் வழங்கப்பட்டது. இதன்படி, புதிதாக 2 போர் கப்பல்கள் கொள்முதல் செய்யப்பட உள்ளன. இந்த கப்பல்கள் இரண்டும் உள்நாட்டிலேயே தயாரிக்கப்பட்ட பிரமோஸ் ஏவுகணைகளை கொண்டதாக இருக்கும். இது தவிர, இந்திய ராணுவத்தின் முக்கிய பீரங்கி வாகனமான அர்ஜூன் டேங்குக்கு கவச மீட்பு வாகனங்கள் வாங்கவும் கவுன்சில் ஒப்புதல் அளித்துள்ளது. இந்த வாகனங்களை பாதுகாப்புத் துறையின் ஆராய்ச்சி, மேம்பாட்டு அமைப்புடன் இணைந்து பாரத் எர்த் மூவர்ஸ் நிறுவனம் உருவாக்குகிறது. இந்த வாகனங்கள் போர்க்காலங்களில் சேதமடைந்த பீரங்கி வாகனங்களை விரைவாக சீரமைக்க உதவும். இவ்வாறு அவர் தெரிவித்தார்.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Tags : military ,Pyramos ,Defense Ministry , Pyramos missile, 2 warships, quarries, logistics
× RELATED சுற்றுலா பயணிகளை ஈர்க்க கடலுக்கு...