×

அரியானாவில் முறைகேடாக நிலம் ஒதுக்கிய வழக்கு முன்னாள் முதல்வர் ஹூடா, வோரா மீது சிபிஐ குற்றப்பத்திரிகை தாக்கல்

புதுடெல்லி: அரியானாவில் காங்கிரஸ் தொடர்புடைய ஏஜெஎல் நிறுவனத்திற்கு முறைகேடாக நிலம் ஒதுக்கீடு செய்த வழக்கில் முன்னாள் முதல்வர் புபேந்தர் சிங் ஹூடா, காங்கிரஸ் தலைவர்களில் ஒருவரான மோதிலால் வோரா மீது சிபிஐ குற்றப்பத்திரிகை தாக்கல் செய்துள்ளது.   அரியானாவில் நேரு குடும்பத்திற்கு சொந்தமாக நேஷனல் ஹெரால்டு என்ற பத்திரிகை இயங்கி வந்தது. இதன் கட்டுப்பாட்டில் அசோசியேட் ஜேர்னல்ஸ் நிறுவனம் (ஏஜெஎல்) இயங்கி வருகிறது. இந்த நிலையில்  கடந்த 1982ல் அந்த மாநிலத்தின் பஞ்ச்குலா பகுதியில் ஏற்கனவே ஒதுக்கீடு செய்யப்பட்ட நிலத்தை அரியானா நகர்ப்புற மேம்பாட்டு அமைப்பு திரும்ப பெற்றது. அந்த நிலத்தை கடந்த 2005ம் ஆண்டில் காங்கிரஸ் சார்ந்த ஏஜெஎல் நிறுவனத்திற்கு மறுஒதுக்கீடு செய்தது.

இதில் அரியானா நகர்ப்புற மேம்பாட்டு அமைப்பின் தலைவர் மற்றும் முதல்வர் ஹூடா விதிமுறைகளை மீறி ஒதுக்கீடு செய்துள்ளதாக சிபிஐ வழக்கு பதிவு ெசய்து விசாரித்து வருகிறது. இந்நிலையில் டெல்லியில் உள்ள சிபிஐ சிறப்பு நீதிமன்றத்தில் சிபிஐ அதிகாரிகள் முன்னாள் அரியானா முதல்வர் ஹூடா, மற்றும் காங்கிரஸ் மூத்த தலைவரும் ஏஜெஎல் நிறுவனத்தின் தலைவருமான வோரா ஆகியோர் மீது நேற்று குற்றப்பத்திரிகை தாக்கல் செய்துள்ளது. இதில் கூறப்பட்டுள்ளதாவது: விதிமுறை மீறி ஏஜெஎல் நிறுவனத்திற்கு நிலம் ஒதுக்கீடு செய்யப்பட்டதால் அரசுக்கு ரூ.67 லட்சம் இழப்பு ஏற்பட்டுள்ளது. இதனால் இருவர் மீதும் கிரிமினல் சதி மற்றும் ஊழல் தடுப்பு சட்டத்தின் கீழ் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டுள்ளது. இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.



பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Tags : Hooda ,land ,Haryana ,CBI ,Vora , அரியானா, முதல்வர் ஹூடா, வோரா, சிபிஐ குற்றப்பத்திரிகை
× RELATED அரியானாவில் பாஜ வேட்பாளரை விரட்டியடித்த விவசாயிகள்