×

தெலங்கானா மாநிலத்தின் காங்கிரஸ் செயல் தலைவராக முகமது அசாருதின் நியமனம்: ராகுல் திடீர் அறிவிப்பு

புதுடெல்லி: தெலங்கானா மாநில காங்கிரஸ் கட்சியின் செயல் தலைவராக முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் முகமது அசாருதின் திடீரென நியமிக்கப்பட்டுள்ளார். தெலங்கானா மாநிலத்தில் வருகிற 7ம் தேதி சட்டப்பேரவை தேர்தல் நடைபெற உள்ளது. தெலுங்கு தேசம் கட்சியுடன் கூட்டணி வைத்து காங்கிரஸ் தேர்தலை எதிர்கொள்கிறது. இந்நிலையில், கட்சியின் நிர்வாகிகளை காங்கிரஸ் தலைமையிடம் திடீரென மாற்றி நடவடிக்கை எடுத்துள்ளது. 2 துணை தலைவர்கள், 8 பொதுச் செயலாளர்கள் மற்றும் 4 செயலாளர்களை புதிதாக நியமிக்க கட்சியின் தலைவர் ராகுல்காந்தி ஒப்புதல் அளித்துள்ளார்.

இது தொடர்பாக கட்சியின் பொதுச்செயலாளர் அசோக் கெலாட் வெளியிட்டுள்ள அறிக்கையில், ‘முன்னாள் எம்பி முகமது அசாருதினை தெலங்கானா பிரதேச காங்கிரஸ் கமிட்டியின் செயல் தலைவராக கட்சியின் தலைவர் ராகுல் காந்தி நியமித்துள்ளார். பி. வினோத் குமார் மற்றும் ஜாபர் ஜாவீத் ஆகியோர் கட்சியின் துணை தலைவர்களாக நியமிக்கப்பட்டுள்ளனர்’ என கூறியுள்ளார்.  முன்னாள் இந்திய கிரிக்கெட் வீரரான முகமது அசாருதின் உத்தரப் பிரதேச மாநிலத்தில் கடந்த 2009ம் ஆண்டு நடந்த தேர்தலில் மொரதாபாத் மக்களவை தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்றார். அதே ஆண்டு காங்கிரஸ் கட்சியில் இணைந்தார். 2014ம் ஆண்டு ராஜஸ்தானின் டோங்-சவாய் மதோபூர் ெதாகுதியில் நின்று தோல்வி அடைந்தார்.

தெலங்கானாவின் செகந்தராபாத் தொகுதியில் 2019 மக்களவை தேர்தலில் போட்டியிட சீட்  அளிக்கும்படி கட்சி தலைமையிடம் கேட்டு வருகிறார். இந்நிலையில், தெலங்கானா காங்கிரசின் செயல் தலைவராக அவர் நியமிக்கப்பட்டுள்ளார். தெலங்கானாவில் முஸ்லிம்கள் அதிகளவில் வசிக்கின்றனர். அவரை செயல் தலைவராக நியமித்தது மூலம், அவர்களின் வாக்குகளை சட்டப்பேரவை தேர்தலில் பெற முடியும் என காங்கிரஸ் கணக்கு போட்டுள்ளது.



பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Tags : Mohammad Azharuddin ,state ,Congress ,Telangana ,announcement ,Rahul , Telangana, Congress, Mohammad Azharuddin, Rahul
× RELATED கோடைகாலம் முடிவதற்குள், ஏரி...