×

ஷத்மான், ஷாகிப் அரை சதம் வங்கதேசம் 5 விக்கெட்டுக்கு 259

தாக்கா: வெஸ்ட் இண்டீஸ் அணியுடனான 2வது டெஸ்டில், வங்கதேசம் முதல் இன்னிங்சில் 5 விக்கெட் இழப்புக்கு 259 ரன் எடுத்துள்ளது. மிர்பூர் தேசிய ஸ்டேடியத்தில் நேற்று தொடங்கிய இப்போட்டியில், டாசில் வென்ற வங்கதேசம் முதலில் பேட் செய்தது. அறிமுக வீரர் ஷத்மான் இஸ்லாம், சவும்யா சர்க்கார் இருவரும் இன்னிங்சை தொடங்கினர். சர்க்கார் 19 ரன்னில் பெவிலியன் திரும்ப, அடுத்து வந்த மோமினுல் ஹக், முகமது மிதுன் இருவரும் தலா 29 ரன் எடுத்து ஆட்டமிழந்தனர். முதல் போட்டியிலேயே சிறப்பாக விளையாடி அரை சதம் அடித்த ஷத்மான் 76 ரன் (199 பந்து, 6 பவுண்டரி) எடுத்து பிஷூ சுழலில் எல்பிடபுள்யு ஆனார்.

முஷ்பிகுர் ரகிம் 14 ரன் எடுத்து ஷெர்மான் லூயிஸ் வேகத்தில் கிளீன் போல்டானார். வங்கதேசம் 190 ரன்னுக்கு 5 விக்கெட் இழந்த நிலையில், கேப்டன் ஷாகிப் அல் ஹசன் - மகமதுல்லா ஜோடி உறுதியுடன் விளையாடி ரன் சேர்த்தது. முதல் நாள் ஆட்ட நேர முடிவில் வங்கதேசம் 5 விக்கெட் இழப்புக்கு 259 ரன் எடுத்துள்ளது. ஷாகிப் ஹசன் 55 ரன், மகமதுல்லா 31 ரன்னுடன் களத்தில் உள்ளனர். வெஸ்ட் இண்டீஸ் பந்துவீச்சில் பிஷூ 2, சேஸ், லூயிஸ், ரோச் தலா 1 விக்கெட் வீழ்த்தினர். இன்று 2வது நாள் ஆட்டம் நடைபெறுகிறது.


பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Tags : Shaktan ,Shakib ,Bangladesh ,scorer , Shaktan and Shakib hit ,half-centuries ,Bangladesh ,top scorer with 259 , 5 wickets
× RELATED பங்களாதேஷ் நாட்டில் இருந்து...