×

குமரியில் தடை செய்யப்பட்ட பகுதியில் வீடியோ பிரான்ஸ் நாட்டை சேர்ந்த 2 பேர் மீது வழக்குப்பதிவு: வெளிநாட்டு சதியா? திடுக் தகவல்கள்

நாகர்கோவில்: குமரி  கடற்கரையில் பிரான்ஸ் நாட்டினர் வீடியோ படம் எடுத்தது தொடர்பாக பிரான்ஸ் நாட்டை சேர்ந்த 2 வாலிபர்கள் மீது போலீசார் வழக்குப்பதிந்துள்ளனர். இதுதொடர்பாக பிடிபட்டவர்களிடம் கிடுக்கிப்பிடி விசாரணை நடத்தி வருகின்றனர். கன்னியாகுமரிக்கு பிரான்சை நேர்ந்த இருவர் கடந்த  23ம் தேதி வந்தனர்.  அவர்களுடன் ெபாள்ளாச்சி மற்றும் சென்னையை சேர்ந்த இரு ஆவணப்படம்  தயாரிப்பவர்களும் பேக்கேஜ் அடிப்படையில் பணிக்கு வந்துள்ளனர். இவர்கள் கன்னியாகுமரியில்,  எந்தவித ஆவணங்களும் அளிக்காமல் அறை எடுத்து தங்கியுள்ளனர். இவர்களை மதபோதகர் ஒருவர், சின்னமுட்டம் மற்றும் வர்த்தக துறைமுகம் அமைய உள்ள பகுதிகளுக்கு அழைத்து சென்றுள்ளார். அங்கு அவர்கள்  வீடியோ எடுத்துள்ளனர். இதைத்தொடர்ந்து வெளிநாட்டினரை மட்டும்  அழைத்து சென்று சின்னவிளை, பெரியவிளையில் வீடியோ எடுத்தனர்.  இறுதியாக ஐஆர்இ சென்றனர். அது பாதுகாக்கப்பட்ட மற்றும் தடை செய்யப்பட்ட பகுதி என்பதால்  வெளிநாட்டினர் படமெடுக்க அனுமதிக்கப்படவில்லை. இதை மீறி  வெளிநாட்டினர் வீடியோ எடுக்கும் தகவலை சின்னவிளை கிராமத்தினர்  உளவுப்பிரிவு போலீசாருக்கு தெரிவித்தனர்.

இதனையடுத்து போலீசார், பொள்ளாச்சி மற்றும் சென்னை  வாலிபர்களை பிடித்தனர். விசாரணையில், சுற்றுச்சூழல்  ஆவணப் படம் தயாரிக்க, சமூக வலைத்தளம் மூலம் பிரான்ஸ் நாட்டினரிடம்  ஒப்பந்தம் செய்துள்ளதாக கூறியுள்ளனர். மேலும் அவர்கள் ஐஆர்இ மற்றும் துறைமுகத்திற்கு  எதிராக போராடி வரும் முக்கிய  நிர்வாகிகளுடன் ரகசியமாக  ஆலோசணை நடத்தியதையும் கூறியுள்ளனர். இதனிடையே, பிரான்சை சேர்ந்தவர்களை பிடிக்க வலை விரித்தனர். ஆனால்,  போலீசார் தேடுவதை அறிந்து, இரவோடு இரவாக திருவனந்தபுரம்  சென்று அங்கிருந்து விமானம் மூலம் பிரான்ஸ் சென்று  விட்டனர். தொடர்ந்து 2 வாலிபர்கள்,  மதபோதகரிடம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த விவகாரம் தொடர்பாக மணவாளக்குறிச்சி போலீசில் 3 பேர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. தடைசெய்யப்பட்ட பகுதியில் அத்துமீறி வீடியோ எடுத்ததாக பிரான்சை சேர்ந்த ஆர்தர் ரோலன்ட் ரானே, ஜூலஸ் டாமின், மணக்குடியை சேர்ந்த பங்கு பணியாளர் கிளிட்டஸ் ஆகிய 3 பேர் மீதும் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. போலீசார் தேடுவதை அறிந்து, இரவோடு இரவாக திருவனந்தபுரம்  சென்று அங்கிருந்து விமானம் மூலம் பிரான்ஸ் சென்று  விட்டனர்.


பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Tags : area ,Cameroon ,France , Kumari, France, Foreign conspiracy,
× RELATED கர்நாடகாவில் வாகன சோதனையின்போது 1,200...