×

சொத்தை அபகரிக்க முயற்சி, உயிருக்கு ஆபத்து காடுவெட்டி குரு மனைவி மருமகன் பரபரப்பு பேட்டி

கும்பகோணம்: எங்கள் சொத்தை அபகரிக்க முயற்சி நடக்கிறது என்று காடுவெட்டி குருவின் மனைவியும்,எங்கள் குடும்பத்தினரின் உயிருக்கு ஆபத்து என்று காடுவெட்டி குருவின் மருமகனும் தெரிவித்துள்ளனர். வன்னியர் சங்க தலைவரும், முன்னாள் எம்எல்ஏவுமான காடுவெட்டி குருவின் மகள் விருத்தாம்பிகை (20), குருவின் தங்கை சந்திரகலா மகன் மனோஜ்கிரண் (27) ஆகிய இருவரும் நேற்று முன்தினம் காதல் திருமணம் செய்து கொண்டு, பாதுகாப்பு கோரி கும்பகோணம் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் தஞ்சமடைந்தனர். உறவினர்கள் வீட்டில் இருக்கும்படி போலீசார் கேட்டுக்கொண்டதால் அவர்கள் குருவின் மற்றொரு தங்கை வீட்டில் தங்கியுள்ளனர். இதுகுறித்து, விருத்தாம்பிகை கூறும்போது, `எனது தந்தை விருப்பப்படிதான் இந்த திருமணம் நடைபெற்றது. இது எனது அம்மாவுக்கு தெரியும்’ என்றார். மனோஜ்கிரண் கூறுகையில், `நான் பிறந்தது முதல் மாமா குருவோடுதான் அதிகம் இருந்தேன். தற்போது ஐஏஎஸ் படித்துக்கொண்டிருக்கிறேன். நாங்கள் சிறு வயதிலிருந்து விரும்பினோம். அதனால் திருமணம் செய்து கொண்டோம்.

எனது குடும்பத்தில் உள்ளவர்களின் உயிருக்கும் ஆபத்து உள்ளது. எனது மாமாவின் பெயரில் ரூ.300 கோடி வன்னியர் சங்க அறக்கட்டளை சொத்துக்கள் உள்ளது. அந்த சொத்தை மாமி, மகன், மகள் ஆகியோர் கையெழுத்து போட்டால்தான் மாறும். அந்த சொத்தை அபகரிக்க முயல்கின்றனர்’ என்று தெரிவித்தார். இதற்கிடையில் நேற்று ஜெயங்கொண்டத்தில் குருவின் மனைவி கூறுகையில், `எனக்கு எதிராக எனது மகன் மற்றும் மகளை எனது கணவரின் தங்கை குடும்பத்தினர் திசை திருப்பி விட்டுள்ளனர். எனது கணவரின் பெயரில் உள்ள சொத்துக்களை அபகரிக்க வேண்டும் என்ற நோக்கில் விருப்பமில்லாமல் எனது மகள் விருத்தாம்பிகைக்கும் எனது கணவரின் தங்கை சாவித்திரியின் மகன் மனோஜ்க்கும் எனக்கு தெரியாமல் திருமணம் செய்து வைத்துள்ளனர். ஆனால் முறைப்படி எனது கணவரின் சொத்துக்கள் அனைத்தும் எனது மகனுக்கு சொந்தம். அவனின் பெயரிலேயே சொத்துக்கள் இருக்க வேண்டும் என்பதே எனது விருப்பம்’ என்றார்.


பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Tags : wife nephew ,kaduvetti ,Guru ,interview , Trying to grab property, kaduvetti interviewed Guru's wife, nephew's interview
× RELATED அரசு மருத்துவமனையில் நாள்தோறும் உணவு