×

அரசு மருத்துவமனையில் நாள்தோறும் உணவு

மதுரை, ஏப்.10: மதுரை அரசு மருத்துவமனையில் தனியார் அமைப்பினர் நோயாளிகளுக்கு நாள்தோறும் விலையில்லா உணவு, மினரல் வாட்டர், ஆரஞ்சு பழம் வழங்கி வருவதற்கு வரவேற்பு பெருகியுள்ளது. தொடர்ந்து 31வது நாளாக நேற்றும் இவை வழங்கப்பட்டன. அறக்கட்டளை நிர்வாகி ஸ்டார் குரு தலைமையில் நடந்த நிகழ்ச்சியில் மருத்துவமனை டீன் ரத்தினவேல் கலந்து கொண்டு உணவு உள்ளிட்ட பொருட்களை வழங்கினார். மருத்துவமனை நோயாளிகள், அவர்களது உறவினர்கள் மற்றும் டாக்டர்கள், மருத்துவ அதிகாரிகள் உள்ளிட்ட ஏராளமானோர் கலந்து கொண்டனர். ஏழை நோயாளிகளுக்கு நாள்தோறும் உணவு பொருட்கள் வழங்கப்படுவதை பல்வேறு தரப்பினரும் வரவேற்றுள்ளனர்.

The post அரசு மருத்துவமனையில் நாள்தோறும் உணவு appeared first on Dinakaran.

Tags : Madurai ,Madurai Government Hospital ,Star Guru ,Government Hospital Daily Meal ,Dinakaran ,
× RELATED மதுரை அரசு மருத்துவமனையில் இருந்து...