×

தீவிரவாத நடவடிக்கைகளை கைவிடும் வரை பாகிஸ்தானுடன் பேச்சுவார்த்தை இல்லை சார்க் மாநாட்டிலும் பங்கேற்க மாட்டோம்

ஐதராபாத்: தீவிரவாத நடவடிக்கைகளை கைவிடும் வரை பாகிஸ்தானுடன் இருதரப்பு பேச்சுவார்த்தை எதையும் இந்தியா நடத்தாது என்றும், சார்க் மாநாட்டிலும் பங்கேற்க மாட்டோம் என்றும் வெளியுறவுத்துறை அமைச்சர் சுஷ்மா சுவராஜ் தெரிவித்தார். பாகிஸ்தானில் கடந்த 2016ம் ஆண்டு நடத்தப்பட இருந்த சார்க் மாநாடு ஜம்மு காஷ்மீர் மாநிலம் உரி ராணுவ முகாமில் பாகிஸ்தான் தீவிரவாதிகள் நடத்திய தாக்குதல் காரணமாக நிறுத்தப்பட்டது. இந்த நிலையில் பாகிஸ்தானின் புதிய பிரதமர் இம்ரான்கான் சார்க் மாநாட்டில் இந்தியா பங்கேற்க மோடிக்கு அழைப்பு அனுப்பப்படும் என்று தெரிவித்ததாக நேற்று முன்தினம் பாகிஸ்தான் வெளியுறவுத்துறை செய்தி தொடர்பாளர் முகமது பைசல் குறிப்பிட்டிருந்தார்.

இந்த நிலையில் பாகிஸ்தானின் ராவி ஆற்றங்கரையில் கர்தார்பூரில் குருநானக்கின் புனித தலம் உள்ள குருத்துவாராவுக்கு பாதை அமைக்கும் பணிக்கான அடிக்கல் நாட்டு விழாவில் பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான் நேற்று பங்கேற்றார். இதற்கு சற்று முன்னதாக மத்திய வெளியுறவுத் துறை அமைச்சர் சுஷ்மா சுவராஜ், `பாகிஸ்தானுடன் பேச்சுவார்த்தை நடத்த கர்தார்பூர் பாதை அமைக்கும் பணி மட்டும் போதாது’ என்று தெரிவித்தார். இது தொடர்பாக தெலங்கானாவில் பாஜ தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டுள்ள சுஷ்மா சுவராஜ் நேற்று ஐதராபாத்தில் நிருபர்களிடம் கூறியதாவது: இந்தியாவில் பாகிஸ்தான் தீவிரவாத நடவடிக்கை மேற்கொள்வதை கைவிடும் வரை அந்த நாட்டுடன் இருதரப்பு பேச்சுவார்த்ைதயை இந்தியா நடத்தாது. இதேபோல் சார்க் மாநாட்டிலும் பங்கேற்க மாட்டோம். இந்திய கர்தார்பூர் குருத்துவாராவில் விசா இல்லாமல் தரிசனம் செய்ய ஏற்பாடு செய்ய வேண்டும் என்று பாகிஸ்தானுக்கு நீண்ட காலமாக கோரிக்கை விடுத்து வருகிறோம். தற்போது முதல்முறையாக பாகிஸ்தானிடம் இருந்து சாதகமான பதில் வந்துள்ளது என்றார்.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Tags : summit ,talks ,SAARC ,Pakistan , not participate, SAARC summit ,Pakistan until ,quit terrorist activities
× RELATED தேசிய அளவிலான ஆக்சுவேரியல்...