×

தெலங்கானா சட்டப்பேரவை தேர்தல் திருநாவுக்கரசர் இரண்டு நாள் பிரசாரம்

சென்னை: தெலங்கானா சட்டமன்ற தேர்தலில் திருநாவுக்கரசர் இரண்டு நாள் பிரசாரம் செய்ய உள்ளார். இதுகுறித்து, தமிழக காங்கிரஸ் ஊடக துறை தலைவர் கோபண்ணா நேற்று வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: தெலங்கானா மாநிலத்தில் நடைபெற உள்ள சட்டமன்ற தேர்தலையொட்டி அம்மாநிலத்தில் தமிழர்கள் அதிகம் வசிக்கும் பகுதிகளில் காங்கிரஸ் மற்றும் தெலுங்குதேசம் உள்ளிட்ட தோழமை கட்சி வேட்பாளர்களை ஆதரித்து தமிழக காங்கிரஸ் தலைவர் திருநாவுக்கரசர் பிரசாரம் செய்ய உள்ளார். இதற்காக வரும் 30ம்தேதி மற்றும் டிசம்பர் 1ம்தேதி ஆகிய இரு நாட்களில் ஐதராபாத் மற்றும் செகந்திராபாத் ஆகிய இடங்களில் பிரசாரம் மேற்கொள்கிறார்.



பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Tags : election ,Telangana Assembly ,Thirunavukkarar , Telangana, Legislative Election, Tirunavukkarasar, campaign
× RELATED மக்களவைத் தேர்தல் காலை 8 மணிக்கு...