×

குட்கா ஊழல் வழக்கில் கைது செய்யப்பட்ட மாதவராவ் உள்ளிட்ட 6 பேரின் காவல் டிசம்பர் 12 வரை நீடிப்பு

சென்னை: குட்கா வழக்கில் கைது செய்யப்பட்ட மாதவராவ் உள்ளிட்ட 6 பேருக்கும் வரும் டிசம்பர் 12ம் தேதி வரை நீதிமன்ற காவலை நீடித்து சிபிஐ நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. தமிழக அரசால் தடை செய்யப்பட்ட குட்கா, பான்மசாலா விற்ற வழக்கை சிபிஐ விசாரித்து வருகிறது. இது தொடர்பாக சிபிஐ குட்கா உற்பத்தியாளார் மாதவராவ், பங்குதாரர்கள் உமா சங்கர் குப்தா, சீனிவாசராவ், மற்றும் குட்காவை விற்பனை செய்ய அரசு தரப்பில் முழு உதவி வழங்கிய உணவு பாதுகாப்புத்துறை அதிகாரிகள் செந்தில் முருகன், சிவகுமார் மற்றும் கலால் துறை அதிகாரி பாண்டியன் ஆகியோரை கைது செய்து சிறையில் அடைத்தனர்.

பின்னர் அனைவரும் ஜாமீன் கோரி தாக்கல் செய்த மனுக்களையும் சென்னை சிபிஐ நீதிமன்றம் தள்ளுபடி செய்தது. இந்தநிலையில் 6 பேரும் நீதிமன்ற காவல் முடிந்து சென்னையில் புழல் சிறையில் இருந்து பலத்த போலீஸ் பாதுகாப்புடன் அழைத்து வரப்பட்டனர். பின்னர் அனைவரும், சிபிஐ நீதிமன்ற நீதிபதி திருநீலபிரசாத் முன்பு ஆஜர்படுத்தப்பட்டனர். அப்போது வழக்கை விசாரித்த நீதிபதி 6 பேரின் நீதிமன்ற காவலை வரும் டிசம்பர் 12ம் தேதி வரை நீடித்து மீண்டும் சிறையில் அடைக்க உத்தரவிட்டார். உணவுத்துறை அதிகாரி சிவகுமாரின் ஜாமீன் மனு இன்று விசாரணைக்கு வர உள்ளது.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Tags : arrest ,Madhavrao ,persons , Gudka case, arrested, corruption, Madhava Rao
× RELATED கனடாவில் ரூ.133 கோடி மதிப்பிலான...