×

வளர்ப்பு நாய், ஆட்டை கொன்று சிறுத்தை அட்டகாசம்: வனத்துறை அலட்சியத்தால் கிராம மக்கள் பீதி

கோத்தகிரி: நீலகிரி மாவட்டம் கோத்தகிரி அருகே உள்ள அலக்கரை செல்லும் சாலையில் காமராஜ் நகர், புதூர், சேலடா ஆகிய கிராமங்கள் உள்ளது. இங்கு 100க்கும் மேற்பட்ட குடியிருப்புகள் உள்ளன. இங்கு கடந்த சில நாட்களாக பகல் நேரத்தில் தேயிலை தோட்டத்திலும், இரவு நேரத்தில் குடியிருப்பு பகுதியில் ஒரு சிறுத்தை சுற்றி வருகிறது.இச்சிறுத்தை குடியிருப்பில் உள்ள ஜெயபால், பாண்டியன், ஷேக் முகமது ஆகியோரது வீடுகளில் புகுந்து 5 வளர்ப்பு நாய்களை கடித்து கொன்றுள்ளது. மேலும் புதூர் பகுதியை சேர்ந்த பாஸ்கரன் என்பவருக்கு சொந்தமான ஆட்டை நேற்று முன் தினம் இரவு சிறுத்தை அடித்து கொன்றது.

 இது குறித்து அப்பகுதி மக்கள் வனத்துறைக்கு தகவல் கொடுத்தும் எவ்வித நடவடிக்கையும் எடுக்காமல் வனத்துறையினர் அலட்சியம் காட்டி வருகின்றனர். குடியிருப்பு பகுதியில் சுற்றி திரியும் சிறுத்தையால் பொதுமக்கள் பீதியடைந்துள்ளனர்.மாவட்ட நிர்வாகம் உடனடியாக நடவடிக்கை எடுத்து குடியிருப்பு பகுதியில் சுற்றி திரியும் சிறுத்தையை கூண்டு வைத்து பிடிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Tags : killing , Pet dog, leopard, forest, rural people
× RELATED விருதுநகர் வெடி விபத்தில் 4 பேர்...