×

கேரளா அரசியலில் மீண்டும் பரபரப்பு தவறான எண்ணத்துடன் அழைத்தார் சபாநாயகர்: சொப்னா பகீர் வாக்குமூலம்

திருவனந்தபுரம்: ‘கேரள சபாநாயகர் தவறான எண்ணத்துடன் என்னை அவரது அடுக்குமாடி குடியிருப்புக்கு வரவழைத்தார்,’ என சொப்னா வாக்குமூலம் அளித்துள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. கேரளாவில் தங்கம் கடத்தல் வழக்கில் தொடர்புடைய சொப்னா கும்பல், வெளிநாட்டுக்கு டாலர்களை கடத்தியும் மோசடி செய்துள்ளனர். இதில், கேரள சபாநாயகர் ஸ்ரீராம கிருஷ்ணனுக்கும் தொடர்பு உள்ளதாக கூறப்படுகிறது. இந்நிலையில், கடந்த டிசம்பர் 16ம் தேதி திருவனந்தபுரம் மகளிர் சிறையில் அமலாக்கத் துறை துணை இயக்குநரிடம் சொப்னா அளித்த வாக்குமூலம் தற்போது வெளியாகி உள்ளது. அதில் சொப்னா கூறியிருப்பதாவது: கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு, ஐக்கிய அரபு அமீரக தூதரகத்தில் நடந்த நிகழ்ச்சியின்போது சபாநாயகர் ஸ்ரீராமகிருஷ்ணனுடன் எனக்கு பழக்கம் ஏற்பட்டது. அப்போது, அவர் எனது செல்போன் நம்பரை வாங்கி கொண்டார். பிறகு அவர் அடிக்கடி என்னை போனில் அழைத்து வந்தார். வாட்ஸ்-அப்பிலும் தகவல்களை அனுப்புவார். திருவனந்தபுரம் விமான நிலையம் அருகில் உள்ள அடுக்குமாடி  குடியிருப்பில் சபாநாயகருக்கு பிளாட் உள்ளது. ஒருநாள் அவர் என்னை அந்த பிளாட்டுக்கு அழைத்தார். தவறான எண்ணத்துடன்தான் அவர் என்னை வரவழைத்தார் என்பது பின்னர்தான் எனக்கு தெரிய வந்தது. அவரது விருப்பத்துக்கு நான் மறுத்ததால், மத்திய கிழக்கு கல்லூரியில் எனக்கு அவர் தருவதாக கூறியிருந்த வேலை பறிபோனது. இவ்வாறு சொப்னா கூறியுள்ளார்.இது கேரள அரசியலில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.* வீண் பழி சுமத்தும் அமலாக்கத்துறைசபாநாயகர் ஸ்ரீராமகிருஷ்ணன் கூறுகையில், ‘‘அமலாக்கத் துறை என் மீது வீண் பழிபோடுகிறது. தேர்தல் நெருங்குவதால் இதுபோன்ற செயல்களில் அமலாக்கத்துறை ஈடுபடுகிறது. ஆனால், இதை மக்கள் நம்ப  மாட்டார்கள்,’’ என்றார்….

The post கேரளா அரசியலில் மீண்டும் பரபரப்பு தவறான எண்ணத்துடன் அழைத்தார் சபாநாயகர்: சொப்னா பகீர் வாக்குமூலம் appeared first on Dinakaran.

Tags : Kerala ,Speaker ,Sobna Bakir ,Thiruvananthapuram ,Sobna ,
× RELATED சந்தன கட்டை கடத்திய கேரளாவை சேர்ந்த 6 பேர் கைது..!!