×

டாஸ்மாக்கில்‘ஸ்வைப்பிங் மெஷின்’

சென்னை: தமிழகத்தில் 4 ஆயிரத்து 700க்கும் மேற்பட்ட டாஸ்மாக் கடைகள் செயல்பட்டு வருகிறது. இந்த கடைகளில் தரத்திற்கு ஏற்றவாறு நாள் தோறும் ரூ.4 லட்சம் முதல் ரூ.1 லட்சம் வரையில் விற்பனை நடைபெற்று வருகிறது. இதேபோல், டாஸ்மாக் கடைகளில் கூடுதல் விலை வைத்து விற்பனை செய்யப்படுவதும் அதிகரித்து வருகிறது. இதனால், டாஸ்மாக் கடைகளில் கொள்ளை சம்பவங்களும், ஊழியர்களை தாக்கி பணத்தை திருடி செல்வதும் அதிகரித்து வருகிறது. இதை தடுக்கும் வகையிலும், பணமற்ற பரிவர்த்தனையை கருத்தில் கொண்டும் தமிழகத்தில் உள்ள அனைத்து டாஸ்மாக் கடைகளிலும் ‘ஸ்வைப்பிங் மெஷின்’ திட்டத்தை நடைமுறைப்படுத்த டாஸ்மாக் நிர்வாகம் திட்டமிட்டது. இதையடுத்து கடந்த செப்டம்பர் மாதம் ‘ஸ்வைப்பிங் மெஷின்’களை வாங்குவதற்கான விலைப்பட்டியலை வங்கிகளிடம் கேட்டிருந்தது.

இதற்கான ஒப்பந்தம் மேற்கொள்ளப்பட்டு, வங்கி அதிகாரிகளை கொண்டு ஸ்வைப்பிங் மெஷின்களை பயன்படுத்துவது குறித்து டாஸ்மாக் ஊழியர்களுக்கு பயிற்சிகளும் கொடுக்கப்பட்டது. அதைத்தொடரந்து முதல்கட்டமாக மத்திய சென்னை பகுதியில் உள்ள 96 டாஸ்மாக் கடைகளில் ஸ்வைப்பிங் மெஷின்களை டாஸ்மாக் நிர்வாகம் நிறுவியுள்ளது. இதேபோல், மற்ற பகுதிகளில் உள்ள கடைகளிலும் விரைவில் ஸ்வைப்பிங் மெஷின்களை நிறுவ டாஸ்மாக் நிர்வாகம் முயற்சிகளை மேற்கொண்டுள்ளது. டிசம்பர் இறுதிக்குள் பிற மாவட்டங்களிலும் இந்த திட்டத்தை நடைமுறைப்படுத்த டாஸ்மாக் நிர்வாகம் திட்டமிட்டுள்ளது.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Tags : Dasmak , Tasmach, swiping machine
× RELATED புதுக்கோட்டையில் டாஸ்மாக் கடையை ஊர்வலமாக சென்று இழுத்து மூடிய பெண்கள்